ஃப்யூவல் இன்ஜெக்ஷன் எஞ்சினுடன் வரும் வெஸ்பா ஸ்கூட்டர்கள்!

By Saravana

கார்புரேட்டருக்கு பதிலாக ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட எஞ்சினுடன் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய வெஸ்பா முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் பிரிமியம் ரகத்தில் மூன்று மாடல்களில் வெஸ்பா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஸ்கூட்டர்களில் கார்புரேட்டர் கொண்ட 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

Vespa Scooter

இந்த ஸ்கூட்டர்கள் ரூ.68,272 முதல் ரூ.76,495 விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த நிலையில், தனது ஸ்கூட்டர் மாடல்களில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் நுட்பம் கொண்ட எஞ்சினை பொருத்தி விற்பனைக்கு கொண்டு வருவதற்கு வெஸ்பா முடிவு செய்துள்ளது.

வரும் நவம்பரில் இந்த புதிய ஃப்யூவல் இன்ஜெக்ஷன் எஞ்சின் கொண்ட மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய நுட்பம் கொண்ட மாடல்கள் அதிக எரிபொருள் சிக்கனத்தையும், சிறப்பான பெர்ஃபார்மென்ஸையும் வழங்கும்.

கார்புரேட்டர் மாடல்களைவிட ஃப்யூவல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்துடன் வரும் புதிய வெஸ்பா மாடல்கள் ரூ.4,000 வரை கூடுதல் விலை கொண்டதாக இருக்கும். இதுதவிர, 150சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட சக்திவாய்ந்த புதிய மாடல்களை அறிமுகம் செய்யும் திட்டமும் வெஸ்பா நிறுவனத்திடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary

 The Italian scooter manufacturer Vespa now is believed to be working on introducing fuel injected systems for future models. Globally Vespa offers fuel injection models and have stopped using carburetors. The new fuel injected engines are expected to improve performance and efficiency of their scooters.
Story first published: Tuesday, September 2, 2014, 9:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X