அப்படியா... 3 ஆல்ட்டோ கார்களின் விலையில் வரும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர்!

By Saravana

இந்திய மார்க்கெட்டில் வெஸ்பா எஸ் என்ற புதிய பிரிமியம் ஸ்கூட்டரை நேற்று பியாஜியோ விற்பனைக்கு கொண்டு வந்தது. இதற்கடுத்ததாக, புதிய வெஸ்பா 946 ஸ்கூட்டரை பியாஜியோ விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

வரும் ஜூன் மாதம் இந்த புதிய ஸ்கூட்டர் இந்திய மார்க்கெட்டில் தடம் பதிக்கும் என்று தெரிகிறது. இந்த நிலையில், இந்த ஸ்கூட்டரின் விலை பற்றிய தகவல் கசிந்துள்ளது. அதாவது, இந்த ஸ்கூட்டரை ரூ.8 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையிலான விலையல் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு விட பியாஜியோ திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேகரிப்பாளர்களுக்கான மாடல்

சேகரிப்பாளர்களுக்கான மாடல்

வாகன சேகரிப்பில் விருப்பம் கொண்டுள்ளவர்களுக்கு ஏதுவான மாடலாக புதிய வெஸ்பா 946 ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக பியாஜியோ தலைவர் ரவி சோப்ரா கூறியுள்ளார்.

அம்மாடியோவ் விலை

அம்மாடியோவ் விலை

தற்போது விற்பனையில் இருக்கும் வெஸ்பா மாடல்கள் போட்டியாளர்களைவிட 35 சதவீதம் கூடுதல் விலையில் விற்கப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி புதிய வெஸ்பா 946 மாடல், ஹார்லி டேவிட்சன் போன்ற நிறுவனங்களின் பிரிமியம் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் சூப்பர் பைக்குகளின் விலைக்கு இணையாக நிர்ணயிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலை ஒப்பீடு

விலை ஒப்பீடு

ரூ.8 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையிலான விலையில் வருவதாக கூறப்படும் நிலையில், இந்த புதிய ஸ்கூட்டரின் விலையில் 3 ஆல்ட்டோ கார்கள் மற்றும் 18 ஆக்டிவா ஸ்கூட்டர்களை வாங்கிவிட முடியும்.

 டிசைன்

டிசைன்

1946ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட எம்பி-6 ஸ்கூட்டரின் வடிவமைப்பை அடிப்படையாக கொண்டு இந்த புதிய வெஸ்பா 946 ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது. பழைய டிசைனை வைத்துக் கொண்டு புதிய தலைமுறை தொழில்நுட்பங்களுடன் மாற்றப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய ஸ்கூட்டர் 11 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 125சிசி எஞ்சினுடன் வருகிறது. பழைய மாடலைவிட 10 சதவீதம் கூடுதல் டார்க்கையும், 30 சதவீதம் கூடுதல் மைலேஜையும் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

 டிஜிட்டல் கிளஸ்ட்டர்

டிஜிட்டல் கிளஸ்ட்டர்

எல்இடி லைட், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் உள்ளிட்டவை கூடுதல் மெருகை கொடுக்கும்.

ஏபிஎஸ் பிரேக்

ஏபிஎஸ் பிரேக்

இந்த ஸ்கூட்டர் ஏஎஸ்ஆர் டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற நவீன பாதுகாப்பு வசதிகளை கொண்டது.

பவர்ஃபுல் மாடல்கள்

பவர்ஃபுல் மாடல்கள்

இந்த புதிய மாடல்கள் தவிர்த்து இந்திய மார்க்கெட்டில் 150 சிசி முதல் 300சிசி வரையிலான எஞ்சின் கொண் மாடல்களையும் அறிமுகப்படுத்த பியாஜியோ திட்டமிட்டிருக்கிறது.

Most Read Articles
English summary
Italian auto major Piaggio is ready to launch India's most expensive scooter the Vespa 946 before June this year. The model will be brought into the country in a CBU (completely built unit) route. The Vespa 946 is expected to carry a price tag of Rs 8 to 9 lakh.
Story first published: Thursday, March 6, 2014, 13:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X