பெரிய சக்கரங்களுடன் வசீகரிக்கும் பியாஜியோவின் புதிய 125சிசி ஸ்கூட்டர்

By Saravana

இத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனம் தற்போது வெஸ்பா பிராண்டில் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், தனது பிராண்டிலான லிபர்டி 125சிசி ஸ்கூட்டரை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்திருந்தது.

இந்த ஸ்கூட்டரின் முக்கிய அம்சமே, இதன் பெரிய சக்கரங்கள்தான். இதுதவிர, பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்காக பியாஜியோ நிறுவனத்தால் பரிசீலிக்கப்பட்டும் மாடல்களில் ஒன்று. இதன் கூடுதல் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

 அதிக வரவேற்பு

அதிக வரவேற்பு

ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் பியாஜியோ லிபர்டி 125 ஸ்கூட்டரின் விற்பனை அமோகமாக இருந்து வருகிறது. இதுவரை ஒரு மில்லியன் லிபர்டி ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்சங்கள்

அம்சங்கள்

பெரிய சக்கரங்கள் மட்டுமின்றி கால்கள் வைப்பதற்கான அகலமான ஃபுட் ஃபோர்டு, அதிக பொருட்களை வைப்பதற்கான வசதி, 7 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் ஆகியவை இந்த ஸ்கூட்டரின் பிரத்யேக அம்சங்களாக கூறலாம்.

 சக்கரங்கள்

சக்கரங்கள்

1,935 மிமீ நீளம், 760 மிமீ அகலம், 1,325 மிமீ உயரம் கொண்ட இந்த ஸ்கூட்டரில் பின்புறத்தில் 16 இஞ்ச் சக்கரமும், முன்புறத்தில் 14 இஞ்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், மிகச்சிறப்பான ஸ்டெபிளிட்டியை வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய லிபர்டி ஸ்கூட்டரில் 10.5 எச்பி ஆற்றலையும், 9.6 என்எம் டார்க்கையும் அளிக்கும் ஃப்யூவல் இன்ஜெக்டடு 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் விற்பனைக்கு வந்தால், வெஸ்பா ஸ்கூட்டர்களில் பொருத்தப்பட்டிருக்கும் கார்புரேட்டர் கொண்ட 125சிசி எஞ்சினுடன் வரும்.

 விற்பனைக்கு வருமா?

விற்பனைக்கு வருமா?

இந்தியாவில் பிரத்யேக வடிவமைப்பு கொண்ட ஸ்கூட்டர் மாடல்களுக்கு வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். எனவே, வாடிக்கையாளர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் இந்த புதிய ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு பியாஜியோ முடிவு செய்துள்ளது.

Most Read Articles
English summary
There is now a chance for one such large wheeled scooter to return to India. We are talking about the Piaggio Liberty 125 cc that was revealed for the first time in India at the Auto Expo 2014.
Story first published: Wednesday, February 12, 2014, 16:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X