போர்ஷே பிராண்டில் கார் வாங்கலைன்னா என்னா... இந்த சைக்கிள் ஓகேவா!

By Saravana

சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்ற போர்ஷே நிறுவனம் உயர்ரக சைக்கிள் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. போர்ஷே பைக் ஆர்எக்ஸ், போர்ஷே பைக் ஆர்எஸ் மற்றும் போர்ஷே பைக் ஆகிய மூன்று மாடல்களில் இந்த சைக்கிள்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

போர்ஷே கார்களின் டிசைன் மாதிரிகள் இந்த சைக்கிள்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இலகு எடையுடன் உயர் ரக முத்திரையுடன் வந்திருக்கும் இந்த சைக்கிள்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் காணலாம். மூன்று மாடல்களின் சிறப்பம்சங்கள் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளன.

 போர்ஷே பைக்

போர்ஷே பைக்

போர்ஷே பைக் என்ற பெயரிலான இந்த சைக்கிள் மாடல்தான் மூன்று மாடல்களில் விலை குறைவானது. நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. போர்ஷே கார்களின் பின்புற டிசைன் போன்றே, இந்த சைக்கிளின் ஃப்ரேமும் வளைவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 கியர் அசெம்பிளி

கியர் அசெம்பிளி

இந்த சிட்டி சைக்கிள்களில் சிமானோ அல்ஃபைன் 8 ஸ்பீடு கியர் அசெம்பிளியும், மகுரா எம்டி26 டிஸ்க் பிரேக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

விலை

விலை

ரூ.2.2 லட்சம் விலை முதல் போர்ஷே சைக்கிள்கள் கிடைக்கும்.

போர்ஷே பைக் ஆர்எக்ஸ்

போர்ஷே பைக் ஆர்எக்ஸ்

இது இரண்டாவது மாடல். ஆஃப்ரோடு எனப்படும் கரடுமுரடான சாலைகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்றது. இலகு எடையும், உறுதியுமிக்க கார்பன் ஃபைபர் ஃப்ரேம் கொண்டது. இந்த சைக்கிளில் 20 ஸ்பீடு சிமானோ கியர் அசெம்பிளி கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக்

ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக்

இந்த சைக்கிளின் சக்கரங்கள் 27.5 இஞ்ச் விட்டம் கொண்டது. முன்புறத்தில் டிடி ஸ்விஸ் ஏர் சஸ்பென்ஷன் அமைப்பு உள்ளது. பின்புற சக்கரத்தில் மகுராவின் ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டிருக்கிறது.

விலை

விலை

ஜெர்மனியில் ரூ.4.09 லட்சம் விலையில் இந்த போர்ஷே பைக் ஆர்எக்ஸ் சைக்கிள் விற்பனைக்கு வந்துள்ளது.

 போர்ஷே பைக் ஆர்எஸ்

போர்ஷே பைக் ஆர்எஸ்

இது நகர்ப்புறத்துக்கு ஏற்ற ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்ட மாடல். இதில், கார்பன் ஃபைபர் ஃப்ரேம் இல்லை என்பது குறையே. ஆனால், இது வெறும் 9 கிலோ மட்டுமே எடை கொண்டது. மூன்று மாடல்களில் எடை குறைவான மாடலும்கூட.

 பிரேக் அமைப்பு

பிரேக் அமைப்பு

மகுராவா அல்ட்ரா லைட்வெயிட் டிஸ்க் பிரேக்குகள், 20 ஸ்பீடு சிமானோ கியர் அசெம்பிளி பொருத்தப்பட்டுள்ளன.

 விலை

விலை

மூன்று மாடல்களில் அதிக விலை கொண்ட மாடல் இதுதான். ரூ.5.03 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்தது.

Most Read Articles
மேலும்... #porsche #two wheeler #போர்ஷே
English summary
For Porsche owners, enthusiasts and anyone who wants to own a Porsche branded vehicle, the German automaker has come out with a trio of high-end, ultra light weight luxury bicycles - Porsche Bike RX, Porsche Bike RS and Porsche Bike.
Story first published: Tuesday, March 4, 2014, 14:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X