முன்னாள் டுகாட்டி டிசைனர் ராயல் என்ஃபீல்டின் தலைமை டிசைனராக நியமனம்!

By Saravana

டுகாட்டி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தி தலைமை டிசைனராக பணியாற்றிய பியரி டெர்பலான்ச் தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமை டிசைனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்ரிக்காவை சேர்ந்த பியரி டெர்பலான்ச் டுகாட்டி நிறுவனத்தின் புகழ்பெற்ற மோட்டார்சைக்கிள்களின் வடிவமைப்பில் முக்கிய பங்கு வகித்தவர். டுகாட்டி முல்டிஸ்ட்ரேடா(2006), டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு(2005), டுகாட்டி எஸ்டி3(2005), டுகாட்டி 999(2003), ஸ்போர்ட்கிளாசிக் சீரிஸ்(2005) ஆகிய மோட்டார்சைக்கிள்களை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தவர்.

Royal Enfield Designer

மேலும், கான்ஃபடரேட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் எக்ஸ்132 ஹெல்கேட் ஸ்பீட்ஸ்டெர் 2014 மாடலை வடிவமைத்ததிலும் இவருக்கு முக்கிய பங்குண்டு. உலகின் பல்வேறு பிரபல மோட்டார்சைக்கிள் நிறுவனங்களில் தலைமை டிசைனராக இருந்த பியரி தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமை டிசைனராக பொறுப்பேற்றிருக்கிறார்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய மாடல்களை வடிவமைக்கும் பணிகளில் பியரி முக்கிய பங்களிப்பு இருக்கும். மேலும், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பல புதிய மாடல்களை உருவாக்கும் திட்டத்துடன் இருப்பதும் பியரி நியமனத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary

 The world's oldest motorcycle manufacturer, Royal Enfield, has hired Pierre Terblanche, who was a design engineer with Ducati motorcycles.
Story first published: Monday, November 24, 2014, 17:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X