சுஸுகியின் புதிய லெட்ஸ் 110 ஸ்கூட்டர் அறிமுகம் - விபரம்

By Saravana

ஆக்செஸ் மற்றும் சுவிஷ் ஆகிய இரு 125சிசி ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வரும் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தற்போது புதிய 110சிசி ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

லெட்ஸ் என்ற பெயரிலான இந்த புதிய ஸ்கூட்டரை பாலிவுட் நடிகை பர்னீதி சோப்ரா அறிமுகம் செய்தார். ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டருக்கு நேரடி போட்டியாக வந்திருக்கும் இந்த புதிய லெட்ஸ் ஸ்கூட்டரின் கூடுதல் விபரங்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

சுஸுகி லெட்ஸ் ஸ்கூட்டரில் 8.7 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க்கையும் அளிக்கும் 112.8சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. சுஸுகியின் புதிய ஈக்கோ பெர்ஃபார்மென்ஸ் தொழில்நுட்பத்துடன் வந்திருக்கும் இந்த ஸ்கூட்டர் அதிக எரிபொருள் சிக்கனம் தருவதாக இருக்கும்.

 மைலேஜ்

மைலேஜ்

லிட்டருக்கு 63 கிமீ மைலேஜை வழங்கும் என சுஸுகி தெரிவிக்கிறது.

வடிவம்

வடிவம்

1810மிமீ நீளம், 660 மிமீ அகலம், 1,120 மிமீ உயரம் மற்றும் 1,250 மிமீ வீல் பேஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து இருக்கையின் உயரம் 765மிமீ ஆக இருக்கிறது.

எடை

எடை

இந்த ஸ்கூட்டர் 98 கிலோ எடை கொண்டதாக இருப்பதால் பெண்களுக்கான ஸ்கூட்டராக சந்தைப்படுத்தப்படும்.

பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

இந்த ஸ்கூட்டரில் 5.2 லிட்டர் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.

 வாடிக்கையாளர் இலக்கு

வாடிக்கையாளர் இலக்கு

இளம் பெண் வாடிக்கையாளர்களையும், கல்லூரி மாணவியரையும் இலக்கு வைத்து இந்த புதிய ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தயாரிப்பு செலவு குறைப்பு

தயாரிப்பு செலவு குறைப்பு

உற்பத்தி செலவீனத்தை குறைப்பதற்காக அதிக அளவில் பிளாஸ்டிக் பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் உள்ளிட்ட பாகங்களில் தரம் குறைந்ததாகவே தெரிகின்றன.

வண்ணங்கள்

வண்ணங்கள்

பியர்ல் மிரா ரெட், மெட்டாலிக் டிரிட்டான் புளூ, பியர்ல் மிராஜ் ஒயிட், கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் மற்றும் மெட்டாலிக் சோனிக் சில்வர் ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

விற்பனை

விற்பனை

சுஸுகி ஜிக்ஸெர் போன்ற இந்த புதிய லெட்ஸ் ஸ்கூட்டரும் ஜூலை முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. யமஹா ரே மற்றும் ஹோண்டா ஆக்டிவா ஐ ஆகிய ஸ்கூட்டர் மாடல்களுக்கு போட்டியை தரும்.

விலை

விலை

சுஸுகி லெட்ஸ் ஸ்கூட்டரும், சுஸுகியின் ஜிக்ஸெர் பைக்கின் விலை போட்டியாளர்களைவிட குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Suzuki Let's is the Japanese two wheeler manufacturer's new scooter model for the Indian market. Up till now Suzuki's scooter lineup consisted of the Access and Swish, both 125cc segment models. Let's is the company's first entry into the more popular 110cc segment and is a direct Activa i competitor.
Story first published: Monday, January 27, 2014, 16:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X