வாடிக்கையாளர்களிடம் 'குட்' வாங்கிய சுஸுகி லெட்ஸ்... முன்பதிவு அமோகம்!

By Saravana

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் இந்தியர்களை கவர்ந்த சுஸுகியின் புதிய ஸ்கூட்டர் மாடல் லெட்ஸ் முன்பதிவில் அசத்தி வருகிறது. இதுவரை 15,000 லெட்ஸ் ஸ்கூட்டர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல பின்னூட்டங்கள் வருவதால் சுஸுகி மகிழ்ச்சியில் திளைத்துள்ளது. ஹோண்டா ஆக்டிவா ஐ மற்றும் யமஹா ரே ஆகிய ஸ்கூட்டர் மாடல்களுக்கு நேரடியாக இந்த மாடலை சுஸுகி களமிறக்கியது. இந்த ஸ்கூட்டரின் முக்கிய அம்சங்களை தெரிந்துகொள்ள ஸ்லைடருக்கு வாருங்கள்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய சுஸுகி லெட்ஸ் ஸ்கூட்டரில் 112.8சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 8.7 எச்பி பவரையும், 9 என்எம் டார்க்கையும் அளிக்கும். சிவிடி டிரான்ஸ்மிஷன் கொண்டது.

மைலேஜ்

மைலேஜ்

சுஸுகி லெட்ஸ் ஸ்கூட்டர் லிட்டருக்கு 63 கிமீ மைலேஜ் தரும் என்று சுஸுகி தெரிவித்துள்ளது. சுஸுகியின் ஈக்கோ பெர்ஃபார்மென்ஸ் எஞ்சின் தொழில்நுட்பம் இந்த மைலேஜை சாத்தியப்பட வைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மொபைல் சார்ஜர்

மொபைல் சார்ஜர்

ஆப்ஷனலாக மொபைல் சார்ஜர் வசதியும் இந்த ஸ்கூட்டரில் கிடைக்கிறது.

வடிவம்

வடிவம்

இந்த புதிய லெட்ஸ் ஸ்கூட்டர் 1,805 மிமீ நீளமும், 655 மிமீ அகலும், 1,120 மிமீ உயரமும் கொண்டது. இதேபோன்று, 160 மிமீ தரை இடைவெளி கொண்ட இந்த ஸ்கூட்டர் 98 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது.

 சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்ககுகளும், பின்புறத்தில் ஸ்விங் ஆர்ம் வகையிலான மோனோ சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. இருபுறத்திலும் 10 இஞ்ச் சக்கரங்களும், ட்யூப்லெஸ் டயர்களும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இருசக்கரங்களிலும் 120மிமீ டிரம் பிரேக்குகள் கொண்டுள்ளது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

நீலம், சில்வர், கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை என மொத்தம் 5 விதமான வண்ணங்களில் கிடைக்கும்.

 விலை

விலை

ரூ.47,610 டெல்லி ஆன்ரோடு விலையில் இந்த புதிய சுஸுகி லெட்ஸ் ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கிறது.

Most Read Articles
English summary
The Suzuki Let's will go up against the likes of Yamaha Ray and Honda's Activa i. Suzuki have reported that the Let's scooter has received positive feedback from buyers and roughly 15,000 booking have been made across the nation.
Story first published: Saturday, June 21, 2014, 15:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X