புதிய யமஹா ஆர்25 அசெம்பிள் செய்யப்படும் விதம்- வீடியோ!

இந்தோனேஷியாவில் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய யமஹா ஆ25 ஸ்போர்ட்ஸ் பைக் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. உற்பத்தியை விஞ்சி தேவை இருப்பதால் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் இந்த புதிய பைக் விற்பனைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த பைக்கின் செயல்திறனை ருசிக்க தருணம் பார்த்து காத்திருக்கும் இந்திய ரசிகர்களுக்கு இது சிறிது ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்த நிலையில், யமஹா பிரியர்களுக்கு ஆறுதல் தரும் வகையில், இந்த புதிய இரட்டை சிலிண்டர் கொண்ட 250சிசி பைக்கின் அசெம்பிள் செய்யப்படும் விதம் குறித்த வீடியோ தொகுப்பை யமஹா வெளியிட்டிருக்கிறது.

அசெம்பிள் செய்வதோடு, டைனமோ உள்ளிட்டவை சோதனை செய்யப்படும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தொகுப்பு யமஹா ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும். அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த புதிய யமஹா 250சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கில் 36 பிஎஸ் பவரையும், 22.1 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கும் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டது.

புதிய யமஹா ஆர்25 அசெம்பிள் செய்யப்படும் விதம்!
<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/mH22kZQgdnY" frameborder="0" allowfullscreen></iframe></center>

Most Read Articles
English summary
Ever wondered what the production line of the Yamaha R25 looks like? Well, wonder no more, as Yamaha has just released a short video documenting the production line with glimpses of other processes like dynamo testing.&#13;
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X