இந்த ஆண்டு ரிலீசாகும் டாப்- 5 பைக் மாடல்கள்!

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் பல புதிய மாடல்கள் மார்க்கெட்டில் அடியெடுத்து வைக்க இருக்கின்றன. அதில், என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் ஏராளமான மாடல்கள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

குறிப்பாக, 250சிசி முதல் 500சிசி வரையிலான ரகத்தில் பல புதிய மாடல்கள் வருகின்றன. புதிய என்ட்ரி லெவல் பிரிமியம் பைக் வாங்க திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில், டாப்- 5 பைக் மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.

எங்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம்!

பஜாஜ் பல்சர் 400எஸ்எஸ்

பஜாஜ் பல்சர் 400எஸ்எஸ்

பஜாஜ் ஆட்டோவின் மிகவும் சக்திவாய்ந்த பைக் மாடலாக பல்சர் 400எஸ்எஸ் வர இருக்கிறது. ஆனால், எஞ்சின் ஒன்றுதான் என்றாலும், ட்யூக் 390 பைக்கைவிட குறைந்த பவர் கொண்டதாகவே இருக்கும். அதேவேளை, ட்யூக் 390 பைக்கைவிட குறைவான விலை கொண்டதாக இருக்கும். இந்த ஆண்டின் பண்டிகை காலத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹயோசங் ஜிடி250 என்

ஹயோசங் ஜிடி250 என்

பைக் மார்க்கெட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஹயோசங் பிராண்டிலிருந்து வரும் புதிய என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்தான் இது. ட்வின் சிலிண்டர் 250சிசி எஞ்சினுடன் இரண்டு பைக் மாடல்களை விற்பனை செய்து வரும் ஹயோசங் முதல் சிங்கிள் சிலிண்டர் கொண்ட எஞ்சினுடன் வருகிறது. எனவே, விலையிலும் மிக சவாலாக இருக்கும். இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர இருக்கிறது.

 மஹிந்திரா மோஜோ

மஹிந்திரா மோஜோ

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை மஹிந்திரா பார்வையாளர்களுக்கு காட்டியது. இந்த பைக்கில் 300சிசி எஞ்சின் மற்றும் ட்யூவல் எக்சாஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கும். இந்த ஆண்டின் பிற்பாதியில் இந்த பைக் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹார்லி ஸ்ட்ரீட் 500

ஹார்லி ஸ்ட்ரீட் 500

ஹார்லி டேவிட்சன் பிராண்டின் மிக குறைவான விலை மாடலாக அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல். இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளதால், மிக சவாலான விலையில் வரும். ராயல் என்ஃபீல்டு பிராண்டுக்கு கடும் நெருக்கடியை தரும் மாடலாக குறிப்பிடப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர இருக்கிறது.

கேடிஎம் ஆர்சி390

கேடிஎம் ஆர்சி390

கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் அதே எஞ்சின்தான் இந்த புதிய பைக் மாடலிலும் பொருத்தப்பட்டிருக்கும். அதேவேளை, இதன் சேஸீயில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதோடு, ட்யூக் பைக்கைவிட தோற்றத்தில் மிக கவர்ச்சியாக இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய பைக்கை கேடிஎம் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
The 2014 Auto Expo is done with and expectations of the consumer have risen tremendously. We list for you, the top 5 bikes below, which are expected to launch in the coming year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X