இது நம்ம ஊரு எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்... புனே நிறுவனம் அசத்தல்

எலக்ட்ரிக் வாகனங்கள் என்றவுடன், ஆமை வேகம், அதிக விலை, சார்ஜ் பிரச்னை என்று ஒரே போரடிக்கும் விஷயங்கள் நினைவுக்கு வருவது வழக்கம். ஆனால், இந்த எண்ணத்தை மாற்றிக் காட்டியுள்ளது பைக் பந்தயம் மற்றும் எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் கலக்கி வரும் புனேயை சேர்ந்த டார்க் நிறுவனம்.

நம் நாட்டு இளைஞர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் யமஹா எஃப்ஸீ- 16 பைக்கை ஓர் முழுமையான எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்காக மாற்றியுள்ளனர். இது பெட்ரோல் மாடலைவிட மிகச்சிறந்த பெர்ஃபார்மென்சை வழங்கும் என்பதுதான் கூடுதல் சிறப்பு. உள்நாட்டிலேயே மிகச்சிறப்பான தொழில்நுட்பம் கொண்ட இந்த எலக்ட்ரிக் பைக்கின் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்

டிசைன்

யமஹா எஃப்ஸீ16 பைக்கில் பெட்ரோல் எஞ்சினை கழற்றிவிட்டு, பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டாரை ஃப்ரேமுடன் பொருத்தியுள்ளனர். இதில், என்ன விசேஷம் எனில் ஒரு சிறிய வெல்டிங் மற்றும் மாற்றங்களை செய்யாமல், பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்படும் அதே போல்ட் நட்டுகளில் பொருந்தும் வகையில் இதனை வடிவமைத்துள்ளனர்.

கியர் கிடையாது

கியர் கிடையாது

கியர் பாக்ஸ் கிடையாது என்பதால், நகரச்சாலைகளில் ஓட்டுவதற்கு எளிதாக இருக்கும்.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

யமஹா எஃப்ஸீ 16 எலக்ட்ரிக் பைக் 0-100 கிமீ வேகத்தை வெறும் 8.7 வினாடிகளிலேயே சோதனையில் கடந்து சாதனை படைத்துள்ளது.

எளிய அசெம்பிளிங்

எளிய அசெம்பிளிங்

பெட்ரோல் எஞ்சினை கழற்றிவிட்டு, பேட்டரி மற்றும் மின் மோட்டாரை வெறும் 4 மணி நேரத்தில் பொருத்திவிடலாம் என்று டார்க் நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.

 டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

இந்த பைக் 120 கிமீ வேகம் வரை செல்லும் கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 40 கிமீ வேகத்தை தொட்டுவிட்டவுடன், இதன் பெர்ஃபார்மென்ஸ் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறதாம்.

ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 40 கிமீ தூரம் வரை செல்ல முடியுமாம். அதுவே சீராக இயக்கினால் 70 கிமீ தூரம் வரை செல்ல முடியும் என்கிறது டார்க் டீம். முழு சார்ஜ் செய்வதற்கு 4 மணி நேரம் பிடிக்குமாம்.

சுற்றுச்சூழலுக்கு நண்பன்

சுற்றுச்சூழலுக்கு நண்பன்

இந்த பைக் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்கும் என்பதால், எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று டார்க் நிறுவனத்தினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

 சட்ட அனுமதி

சட்ட அனுமதி

சட்ட விதிகளின்படி இந்த பைக்கை சாலையில் இயக்க அனுமதி கிடையாது. இதில், சட்ட ரீதியிலான அனுமதி பெறுவதற்கு அதிக நிதி தேவைப்படுவதால், தற்போது உடனடியாக இந்த பைக்கிற்கு அனுமதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொருட்கள் வைக்க இடவசதி

பொருட்கள் வைக்க இடவசதி

இந்த பைக்கின் மற்றொரு வசதி, இதன் பெட்ரோல் டேங்க்கை பொருட்களை வைத்து செல்வதற்கான அறையாக கூட மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.

மலையேற்றம்

மலையேற்றம்

இரண்டு பேர் செல்லும்போது ஏற்றமான மலைச்சாலைகளில் கூட மிகச்சிறப்பாக செல்வதாக டார்க் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

தயாரிப்பு செலவு

தயாரிப்பு செலவு

இந்த பைக்கின் எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரிக்கான செலவீனம் மட்டும் ரூ.4 லட்சம் ஆகிறதாம். ஆனால், அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும்போது இந்த விலை கடுமையாக குறையும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X