இந்தியாவில் எஞ்சின் பவர் பற்றி தவறான தகவல்... பிராயசித்தம் தேடும் டிரையம்ஃப்!

இந்தியாவில், பைக் எஞ்சின்களின் அதிகபட்ச சக்தி வெளிப்படுத்தும் திறன் குறித்து தவறான தகவல் வெளியிட்டதற்கு பிராயச்சித்தமாக, 3 வழிகளை ஸ்ட்ரீட் டிரிப்பிள் வாடிக்கையாளர்களுக்கு டிரையம்ஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த டிரையம்ஃப் பைக் நிறுவனம் இந்தியாவில் உயர்வகை பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பைக் மாடல்களின் எஞ்சின் பவரை அதிகமாக காட்டி தகவல்களை வெளியிட்டது.

Triumph Street Triple

அதாவது, இந்தியாவில் ஸ்ட்ரீட் டிரிப்பிள் பைக் 104.5 பிஎச்பி சக்தி கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், உண்மையிலேயே இந்திய மாடல் 77.88 பிஎச்பி பவரை அதிகபட்சமாக அளிக்கும். ஆனால், இங்கிலாந்தில் விற்பனை செய்யப்படும் ஸ்ட்ரீட் பைக்கின் 104.5பிஎச்பி பவர் கொண்டதாக இந்தியாவிலும் தெரிவிக்கப்பட்டது.

இந்த தவறான தகவல் குறித்து சமீபத்தில் தெரியவந்தது. இதற்கு வருத்தம் தெரிவித்த டிரையம்ஃப் நிறுவனம், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பைக் மாடல்களின் எஞ்சின் பவர் குறித்த உண்மையான விபரங்களை வெளியிட்டது. இது டிரையம்ஃப் பிராண்டு மீதான நம்பகத்தன்மையை குறைக்கும் செயலாக மாறியது.

இந்தநிலையில், வாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல் அளித்து விற்பனை செய்ததற்கு பிராயசித்தம் தேடும் விதத்தில், ஸ்ட்ரீட் டிரிப்பிள் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு 3 வழிகளை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

1. வாடிக்கையாளர்கள் பைக்கை ஒப்படைத்துவிட்டு, முழுப்பணத்தையும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

2.ரூ.1.50 லட்சம் மதிப்புடைய ஆக்சஸெரீகளை ரூ.10,000 செலுத்திவிட்டு பெற்றுக் கொள்ளலாம். இந்த ஆக்சஸெரீ பேக்கில் இசியூ ரீமேப்பிங்குடன், ஆரோ எக்ஸ்சாஸ்ட்டை வாடிக்கையாளர்கள் பெற முடியும். இதன்மூலம், பைக்கின் எஞ்சின் பவரை 104.5 பிஎச்பி வரை அதிகரிக்க முடியும். இது அராய் விதிமுறைகளை பின்பற்றிய முறை இல்லை என்பதால், பைக்கில் செய்யப்படும் மாறுதல்கள் குறித்து ஈட்டுறுதிச் சீட்டு உடன்படிக்கைக்கு உரிமையாளர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.

3. மூன்றாவது ஆப்ஷன் படி, அதிகபட்ச பவரை பெறும் வகையில், எஞ்சினில் ட்யூனிங் செய்து தரப்படும். இதற்கும் ஈட்டுறுதிச்சீட்டு உடன்படிக்கைக்கு உரிமையாளர்கள் உடன்பட வேண்டும். இந்த மூன்று ஆப்ஷன்களில் ஏதாவது ஒன்றை ஸ்ட்ரீட் டிரிப்பிள் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் ஆக்சஸெரீகள் மீது 20 சதவீதம் தள்ளுபடி!

Most Read Articles
English summary
Triumph India has been in the spotlight recently due to a mistake on their part. They had provided performance figures of their UK spec motorcycles. In reality the motorcycles provided in India are the slightly detuned Brazilian and other developing market models. Now the British manufacturer has opted to improve its tainted image. They are providing owners with a sort of compensation. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X