வாடிக்கையாளருக்கு எளிய கடன் வசதி: எச்டிஎஃப்சி வங்கியுடன் டிரையம்ஃப் ஒப்பந்தம்!

By Saravana

இங்கிலாந்தை சேர்ந்த டிரையம்ஃப் நிறுவனம் 10 புதிய பிரிமியம் பைக் மாடல்களை சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தது. ரூ.5.7 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான பைக் மாடல்களை டிரையம்ஃப் தற்போது விற்பனை செய்கிறது.

இந்த நிலையில், தனது பைக்குகளுக்கு எளிய கடன் திட்டத்தை வாடிக்கையாளர்கள் பெறும் வகையில், எச்டிஃப்சி வங்கியுடன் டிரையம்ஃப் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

Triumph Bike

பைக்கின் விலையில் 80 சதவீதம் வரை கடனைற்கு 12.9 சதவீத வட்டி விகிதத்தில் பெற முடியும். மேலும், 24 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரையிலான தவணைகளில் செலுத்தும் வசதியையும் எச்டிஎஃப்சி வங்கி வழங்குகிறது.

மேலும், கடனை விரைவாக பெறுவதற்கும், வீட்டிற்கே வந்து கடனுக்கான ஆவணங்கள் மற்றும் இதர நடைமுறைகளையும் எச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

இது டிரையம்ஃப் பைக் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
The British motorcycle brand Triumph had recently announced their product offering for India. To attract buyers finance option had to be chosen. Triumph India has tied up with India's leading bank HDFC, in an attempt to provide lucrative finance schemes.
Story first published: Thursday, January 16, 2014, 13:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X