வருகிறது புதிய 200சிசி, 250சிசி அப்பாச்சி பைக்குகள்: அதிரடி காட்டும் டிவிஎஸ்

By Saravana

அடுத்த ஆண்டு புதிய 200சிசி அப்பாச்சி பைக்கை டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய உள்ளது. இதைத்தொடர்ந்து, 250சிசி அப்பாச்சி பைக்கையும் அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

பஜாஜ் பல்சர் வரிசைக்கு போட்டியாக டிவிஎஸ் நிறுவனம் அப்பாச்சி பிராண்டில் பல புதிய மாடல்களை அறிமுகம் செய்ய டிவிஸ் முனைப்பு காட்டி வருகிறது. புதிய அப்பாச்சி மாடல்கள் குறித்து அந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத் தலைவர் வினய் ஹார்னி உறுதிப்படுத்தியிருக்கிறார்.

3 புதிய மாடல்கள்

3 புதிய மாடல்கள்

அப்பாச்சி பிராண்டில் 2 அல்லது 3 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த டிவிஎஸ் திட்டமிட்டுள்ளது. இவை பல்சர் வரிசை பைக்குகளுக்கும், என்ட்ரி லெவல் ஸ்போரட்ஸ் பைக் மாடல்களுக்கும் போட்டியை தருவதாக இருக்கும்.

புதிய 200சிசி அப்பாச்சி

புதிய 200சிசி அப்பாச்சி

புதிதாக வரும் அப்பாச்சி மாடல்கள் 180சிசி எஞ்சினுக்கும் மேலானதாக இருக்கும். அதில், முதலாவதாக 200சிசி மாடல் வருகை தருகிறது.

அடுத்த ஆண்டு ரீலிஸ்

அடுத்த ஆண்டு ரீலிஸ்

அடுத்த ஆண்டு 200சிசி அப்பாச்சி விற்பனைக்கு வந்துவிடும். இதைத்தொடர்ந்து, 250சிசி மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டிரேக்கன் கான்செப்ட்ட

டிரேக்கன் கான்செப்ட்ட

கடந்த மாதம் பிப்ரவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த டிவிஎஸ் டிரேக்கன் கான்செப்ட் அடிப்படையில் புதிய அப்பாச்சி மாடல்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்சங்கள்

அம்சங்கள்

மோனோஷாக் அப்சார்பர், எஞ்சினுக்கு கீழே எக்சாஸ்ட் பைப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி லைட்டுகளுடன் கூடி மட்கார்டுகள் ஆகிய சிறப்பம்சங்களை கொண்டிருக்கும்.

Most Read Articles
English summary

 TVS Motor has already been left far behind in the entry level performance motorcycle segment, not just by domestic competitors, but even by international ones. But its always better late than never and following this policy the two wheeler manufacturer will bring out its first 200cc engined product in 2015.
Story first published: Tuesday, March 11, 2014, 10:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X