டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணியில் வரும் முதல் பைக் எது?

By Saravana

கடந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வண்ணம், டிவிஎஸ் மோட்டார்ஸ் - பிஎம்டபிள்யூ மோட்டோராட் இடையில் புதிய கூட்டணி அமைந்தது. இந்த கூட்டணியிலிருந்து வெளிவர இருக்கும் பைக் மாடல்கள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ மோட்டோராட் கூட்டணியிலிருந்து வெளிவரும் முதல் பைக் குறித்த சில யூகத்தகவல்கள் ஆட்டோமொபைல் தளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அதில், லேட்டஸ்ட்டாக வந்துள்ள தகவலின்படி, முதலில் புதிய ஸ்ட்ரீட் பைக் மாடல் இந்த கூட்டணியிலிருந்து வெளிவர உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

முதல் மாடல்

முதல் மாடல்

டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணியில் முதலாவதாக ஹீரோ இம்பல்ஸ் போன்ற ஆஃப் ரோடு பைக் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறின. ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, முதல் மாடலாக ஸ்ட்ரீட் பைக் ரகத்தில் புதிய பைக் மாடல் வருகிறதாம். அதாவது, வர்த்தகத்தை பாதுகாப்பாக முன்னெடுத்து செல்வதற்காக ஆஃப் ரோடு பைக் மாடல் வடிவமைப்பை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம்.

எஞ்சின்

எஞ்சின்

முதல் பைக் மாடல் 300சிசி திறன் கொண்ட 4 ஸ்ட்ரோக் எஞ்சினுடன் வருகிறது. இது சிங்கிள் சிலிண்டர் கொண்டதாக இருக்கும்.

டிவிஎஸ் பேட்ஜ்

டிவிஎஸ் பேட்ஜ்

இந்த கூட்டணியின் புதிய பைக் மாடல் முதலில் டிவிஎஸ் மோட்டார்ஸ் பிராண்டில் வெளியிடப்படும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த புதிய பைக் மோனோஷாக் அப்சார்பர், எஞ்சினுக்கு கீழே எக்சாஸ்ட் பைப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி லைட்டுகளுடன் கூடி மட்கார்டுகள் ஆகிய சிறப்பம்சங்களை கொண்டிருக்கும்.

அறிமுகம் எப்போது?

அறிமுகம் எப்போது?

அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2016ம் ஆண்டு முதல் காலாண்டில் டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டு தயாரிப்பில் வெளிவரும் முதல் பைக் மாடல் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேரடி போட்டி

நேரடி போட்டி

பஜாஜ் ஆட்டோ மற்றும் ஆஸ்திரியாவின் கேடிஎம் கூட்டணிக்கு நேரடி போட்டியாக டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணியின் தயாரிப்புகள் வெளிவரும்.

Most Read Articles
English summary
According to sources, the very first motorcycle coming from the duo will be a street motorcycle that will wear the TVS badge. The sources say that the motorcycle will be powered by a 300cc, single cylinder, four stroke engine.
Story first published: Tuesday, April 22, 2014, 10:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X