புதிய அப்பாச்சி, விக்டர், ஸெஸ்ட் ஸ்கூட்டர்... வரிசை கட்டும் டிவிஎஸ்!

By Saravana

சென்னையில் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் என்ற புதிய பைக்கின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில், அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வேணு சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கை தொடர்ந்து டிவிஎஸ் நிறுவனம் வெளியிட இருக்கும் புதிய பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டார்.

மேலும், டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவாகி வரும் புதிய ஸ்போர்ட்ஸ் பைக் குறித்த சில விபரங்களையும் தெரிவித்தார். இதில், புதிய அப்பாச்சி, புதிய விக்டர் மற்றும் புதிய ஸெஸ்ட் ஸ்கூட்டர்கள் அடக்கம். இந்த புதிய மாடல்களின் அறிமுக விபரத்தை ஸ்லைடரில் காணலாம்.

புதிய ஸ்கூட்டர்

புதிய ஸ்கூட்டர்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஸ்கூட்டி வரிசையில் சக்திவாய்ந்த புதிய ஸெஸ்ட் ஸ்கூட்டரை டிவிஎஸ் காட்சிக்கு வைத்திருந்தது. வரும் ஜூன் மாதத்தில் இந்த புதிய ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வர டிவிஎஸ் திட்டமிட்டுள்ளது. உருவத்தில் ஸ்கூட்டி மாடல்களை போன்று இருந்தாலும், ஜுபிடர், வீகோ ஸ்கூட்டர்களில் இருக்கும் 110சிசி எஞ்சினை இந்த புதிய ஸ்கூட்டரில் பொருத்தியிருக்கிறது டிவிஎஸ். இதனால், ஸ்கூட்டி வரிசையில் சக்திவாய்ந்த மாடலாக இருக்கும். இது 8 எச்பி பவர் கொண்டதாக இருக்கும்.

 புதிய டிவிஎஸ் விக்டர்

புதிய டிவிஎஸ் விக்டர்

விக்டர் பிராண்டை மீண்டும் சந்தைக்கு கொண்டு வருகிறது டிவிஎஸ். ஜூலை - செப்டம்பர் இடையில் புதிய விக்டர் பைக் விற்பனைக்கு வர இருக்கிறது. ஆனால், புதிய விக்டர் குறித்த தகவல்களை டிவிஎஸ் வெளியிடவில்லை. தற்போது மாதத்திற்கு 6 லட்சம் கம்யூட்டர் ரக பைக்குகள் விற்பனையாகின்றன. அதில், டிவிஎஸ் பங்கு 35,000 பைக்குகள் என்ற அளவில் உள்ளது. அடுத்த 6 மாதங்களில் புதிய விக்டர் வந்தபின் இந்த எண்ணிக்கையை மாதத்திற்கு 50,000 பைக்குகள் என்ற அளவில் டிவிஎஸ் பங்களிப்பு உயரும் என்று நம்புவதாக வேணு சீனிவாசன் தெரிவித்தார்.

புதிய அப்பாச்சி

புதிய அப்பாச்சி

அப்பாச்சி பைக்கில் சில மாறுதல்களை செய்து மேம்படுத்தப்பட்ட மாடலாக வெளியிட உள்ளது டிவிஎஸ் மோட்டார்ஸ். இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய பைக் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ பைக்

டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ பைக்

டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவாகி வரும் பைக் மாடல் குறித்து வேணு சீனிவாசன் கூறுகையில், அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அந்த புதிய பைக் அறிமுகம் செய்யப்படும் என்றார்.

போட்டியாளர்

போட்டியாளர்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டிரேக்கன் கான்செப்ட் அடிப்படையில் புதிய பைக்கை டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ உருவாக்கி வருவதாக கணிக்கப்படுகிறது. இந்த பைக்கில் 300சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என்றும், கேடிஎம் டியூக் பைக் மாடல்களுக்கு போட்டியை தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
English summary
TVS launched the Star City+ commuter motorcycle yesterday in Chennai. Priced at Rs 44,000 (ex-showroom Delhi), the new motorcycle replaces the existing Star City. Speaking during the event,company chairman and managing director, Venu Srinivasan revealed their plans for the near future, which includes some exciting and interesting new launches.
Story first published: Tuesday, May 6, 2014, 16:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X