முதல்முறையாக ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் வந்த வெஸ்பா ஸ்கூட்டர்!

வெஸ்பா பிராண்டில் பியோஜியோ விற்பனை செய்யும் பவர்ஃபுல் ஸ்கூட்டர் மாடல் வெஸ்பா ஜிடிஎஸ். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் இந்த ஸ்கூட்டர் விற்பனையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், வெஸ்பா ஜிடிஎஸ் ஸ்கூட்டரில் முதல்முறையாக பல்வேறு புதிய வசதிகளை பியாஜியோ அறிமுகம் செய்துள்ளது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் புதிய மல்டிமீடியா சிஸ்டம் ஆகியவற்றை புதிய வெஸ்பா ஜிடிஎஸ் மாடலில் இடம்பெற செய்துள்ளது பியாஜியோ.

 ஏபிஎஸ் சிஸ்டம்

ஏபிஎஸ் சிஸ்டம்

ஸ்கூட்டர் சக்கரங்களின் சுழல் வேகத்தை சென்சார் மூலம் கணக்கிட்டு செயல்படும் புதிய ஏபிஎஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது. இது இரண்டு ஹைட்ராலிக் யூனிட்டுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது சக்கரங்களில் பிரேக் லாக் ஆவதை தவிர்ப்பதோடு, பிரேக் பிடிக்கும்போது சக்கரங்கள் சறுக்கிச் செல்வதையும் குறைக்கும். மேலும், முதல்முறையாக ஸ்கூட்டரில் ஏபிஎஸ் சிஸ்டத்தை இந்த ஸ்கூட்ட்ர மூலமாக பியாஜியோ அறிமுகம் செய்துள்ளது.

புதிய சஸ்பென்ஷன் அமைப்பு

புதிய சஸ்பென்ஷன் அமைப்பு

முன்புறத்தில் புதிய சஸ்பென்ஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்புற சிங்கிள் ஆர்ம் சஸ்பென்ஷனையும், டிரெயிலிங் ஆர்ம் பகுதியையும் இணைப்பதற்கு தற்போது ஹிங்க்டு பின் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்,க நிலைத்தன்மை மற்றும் சொகுசை வழங்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த சஸ்பென்ஷன் அமைப்பு முதலில் பிரைமாவெரா மற்றும் ஸ்பிரின்ட் ஆகிய ஸ்கூட்டர்களில் பியாஜியோ அறிமுகம் செய்தது.

டிராக்ஷன் கன்ட்ரோல்

டிராக்ஷன் கன்ட்ரோல்

வெஸ்பா ஜிடிஎஸ் ஸ்கூட்டரில் ஏஎஸ்ஆர் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளதால், கூடுதல் பாதுகாப்பு கொண்ட ஸ்கூட்டர் மாடலாக இருக்கிறது. ஸ்கூட்டரில் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டமும் முதல்முதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 மல்டிமீடியா சிஸ்டம்

மல்டிமீடியா சிஸ்டம்

இந்த வெஸ்பா ஜிடிஎஸ் ஸ்கூட்டரில் புதிய மல்டிமீடியா சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் உள்ள ஆன்போர்டு கம்ப்யூட்டருடன் ஸ்மார்ட்போனை தொடர்பு படுத்திக் கொண்டு ஏராளமான தகவல்களை பெறலாம். வாகனத்தின் வேகம், மைலேஜ், பவர், டார்க், டயர் பிரஷர் மானிட்டர், டயர் தேய்மானம் உள்ளிட்ட தகவல்களை இதிலிருந்து பெற முடியும்.

 இரு வேரியண்ட்டுகள்

இரு வேரியண்ட்டுகள்

வெஸ்பா ஜிடிஎஸ் மற்றும் ஜிடிஎஸ் சூப்பர் ஆகிய இரு வேரியண்ட்டுகளில் இந்த ஸ்கூட்டர் கிடைக்கும். இந்த ஸ்கூட்டரில் 22 எச்பி ஆற்றலையும், 21.69 என்எம் டார்க்கையும் அளிக்கும் 278சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

 விலை

விலை

இந்த புதிய வெஸ்பா ஜிடிஎஸ் ஸ்கூட்டரை வெஸ்பா 946 ஸ்கூட்டரைவிட சற்றே குறைவான விலையில் விற்பனை செய்ய பியாஜியோ திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் வெஸ்பா 946 ஸ்கூட்டரின் விலை இந்திய மதிப்பில் ரூ.8 லட்சமாக கூறப்படுகிறது. இதைவிட சற்று குறைவான விலையில் ஜிடிஎஸ் விற்கப்பட உள்ளது.

Most Read Articles
English summary
Vespa GTS, the most powerful scooter sold by the Italian two wheeler maker, has been updated with a slew of technological upgrades which includes ABS, traction control, a new Enhanced Sliding Suspension (ESS) and Vespa Multimedia Platform.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X