ஜூன் 30ல் புதுப்பொலிவுடன் வரும் யமஹா எஃப்இசட்- எஸ் பைக்!

By Saravana

வரும் 30ந் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு யமஹா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக யமஹா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், கடந்த பிப்ரவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த யமஹா எஃப்இசட் எஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அன்று விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தெரிகிறது.

Yamaha FZ S

வெளிப்புறத் தோற்றத்திலும் சில மாறுதல்களை செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. புதிய டிசைன் கொண்ட பெட்ரோல் டேங்க், புகை போக்கி குழாய், ஹெட்லைட் மற்றும் மட்கார்டு உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் இருக்கும். இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலிலும் சிறிது மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும்.

புதுப்பொலிவுடன் வரும் யமஹா எஃப்இசட் எஸ் பைக்கின் எஞ்சினில் மாற்றங்கள் இருக்காது. தற்போதைய மாடலில் செயல்புரியும் 14 பிஎச்பி சக்தியையும், 13.6 என்எம் டார்க்கையும் அளிக்கும் எஞ்சினுடன் வருகிறது. வரும் 30ந் தேதி இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரும் என்பது ஆட்டோமொபைல் வட்டாரத்தின் யூகமே. இதுகுறித்து யமஹாவிடமிருந்து உறுதியானத் தகவல் இல்லை.

Most Read Articles
English summary
Yamaha India will organising a media conference on 30th July, 2014. The Japanese manufacturer is always up for surprises and it could possibly launch the facelifted variant of the FZ-S for India. They had showcased a concept version of FZ-S at 2014 Auto Expo, which was held in New Delhi.
Story first published: Saturday, June 28, 2014, 10:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X