2016ல் புதிய எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகப்படுத்தும் யமஹா!
By Saravana
கடந்த ஆண்டு டோக்கியோ மோட்டார் ஷோவில் பல புதிய பைக் கான்செப்ட்டுகளை யமஹா பார்வைக்கு வைத்திருந்தது. அதில், சில எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் மாடல்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
அதில், PES1 மற்றும் PED1 ஆகிய இரண்டு புதிய எலக்ட்ரிக் பைக் மாடல்கள் பல புதிய வசதிகள் கொண்டதாக இருந்தன. இந்த நிலையில், இந்த இரு பைக் மாடல்களும் 2016ல் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய அம்சம்
முக்கிய அம்சம்
PES1 மற்றும் PED1 ஆகிய இரு எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் மாடல்களிலும், பேட்டரியில் சார்ஜ் தீர்ந்துவிட்டால், பேட்டரியை மாற்றிக் கொள்ளும் வசதி கொண்டது. இதன்மூலம், பயண தூரத்தை வெகுவாக நீடித்துக் கொள்ளும் வசதி கொண்டதாக இருக்கும்.
சோதனை ஓட்டம்
சோதனை ஓட்டம்
ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரகத்திலான புதிய PES1 எலக்ட்ரிக் பைக் தற்போது தீவிர சோதனை ஓட்டத்தில் இருந்து வருகிறது. இன்னும் இரு ஆண்டுகளில் இது உற்பத்தி நிலையை எட்டும்.
மோனோகாக் சேஸீ
மோனோகாக் சேஸீ
PES1 எலக்ட்ரிக் பைக் மோனோகாக் சேஸீ கொண்டது. சேஸீயில் எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருப்பதோடு, மிக ஸ்டைலாகவும் இருக்கிறது.
மற்றொரு எலக்ட்ரிக் பைக்
மற்றொரு எலக்ட்ரிக் பைக்
டர்ட் பைக் ரகத்தில் வரும் பிஇடி - 1 என்ற பெயரிலான இந்த புதிய கான்செப்ட் மாடலும் மோனோகாக் சேஸீயுடன் எலக்ட்ரிக் பைக்காக வருகிறது. இது கேடிஎம் ஃப்ரீடீ இ பைக்குக்கு போட்டியாக இருக்கும்.
ஆஃப் ரோடு மாடல்
ஆஃப் ரோடு மாடல்
பிஇடி-1 பைக் ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையிலான வடிவமப்பை கொண்டது. இது வளர்ந்த மார்க்கெட்டுகளில் மட்டுமே விற்பனை செய்ய யமஹா திட்டமிட்டுள்ளது.
குறைவான விலை
குறைவான விலை
இந்த எலக்ட்ரிக் பைக்குகளில் சிறிய மற்றும் குறைவான விலை கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். எனவே, இந்த பைக்குகளின் விலையை மிக சவாலாக நிர்ணயிக்கும் வாய்ப்பு இருப்பதாக ஆட்டோமொபைல் துறையினர் சொல்கின்றனர்.
இன்றைய ஃபேஸ்புக் வீடியோ!
Post by DriveSpark Tamil.
Most Read Articles
மேலும்... #yamaha #two wheeler #யமஹா
English summary
Story first published: Thursday, April 24, 2014, 10:55 [IST]
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X