புதிய 125சிசி யமஹா மெஜஸ்ட்டி எஸ் ஸ்கூட்டர் அறிமுகம்

By Saravana

புதிய 125சிசி ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டரை யமஹா சர்வதேச அளவில் அறிமுகம் செய்துள்ளது. வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய ஸ்கூட்டர் யமஹா மெஜஸ்ட்டி எஸ் என்று பெயரில் வந்துள்ளது.

நகர்ப்புறவாசிகளை கவரும் பல்வேறு அம்சங்களுடன் யமஹாவின் எக்ஸென்டர், டிலைன் ஆகிய மாடல்களுடன் இந்த புதிய யமஹா மெஜஸ்ட்டி எஸ் மாடலும் இணைந்து கொள்கிறது.


 டிசைன்

டிசைன்

பெரிய ஹெட்லைட், வைன்ட்ஸ்கிரீன் போன்றவை இந்த ஸ்கூட்டரின் முன்பக்கத்தை கம்பீரமாக எடுத்து காட்டுகின்றன. டிஜிட்டல், அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், எல்இடி டெயில் லைட்டுகள் அகலமான ஃபுட் போர்ட் ஆகியவை சிறப்ப்பம்சங்களாக இருக்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய 125சிசி ஸ்கூட்டரில் 11.9 எச்பி பவரையும், 11.6 என்எம் டார்க்கையும் அளிக்கும் லிக்யூடு கூல்டு 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. சிவிடி டிரான்ஸ்மிஷன் கொண்டது.

டிஸ்க் பிரேக்

டிஸ்க் பிரேக்

முன்புறத்தில் 267 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 245 மிமீ டிஸ்க் பிரேக்குகளும் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த ஸ்கூட்டரில் ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட் வைக்கும் இடவசதியுடன் கூடிய ஸ்டோரேஜ் கம்பார்ட்மென்ட் இருக்கைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 7.4 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது. 148 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது.

இந்தியாவுக்கு...?

இந்தியாவுக்கு...?

வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய யமஹா ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாது என்று தகவலகள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
மேலும்... #yamaha #two wheeler #யமஹா
English summary
Yamaha will be offering an all new 125cc scooter which, will bring together style, fun as well as convenience. It will adorn a modern avatar and will have superior performance over its competitors. The Japanese motorcycle manufacturer have christened their new scooter the Majesty S 125.
Story first published: Saturday, May 17, 2014, 12:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X