ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு போட்டியாக வரும் புதிய யமஹா ஸ்கூட்டர்

By Saravana

ஆக்டிவா 125சிசி ஸ்கூட்டருக்கு போட்டியாக புதிய 125சிசி ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த யமஹா திட்டமிட்டுள்ளது.

தற்போது ரே மற்றும் ஆல்ஃபா ஆகிய இரு ஸ்கூட்டர்களை யமஹா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், 125சிசி மார்க்கெட்டில் புதிய ஸ்கூட்டர் மாடலை யமஹா அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Yamaha 125cc Scooter

இந்த புதிய ஸ்கூட்டர் 04எக்ஸ் என்ற குறியீட்டுப் பெயரில் வடிவமைக்கப்பட்டு வருவதாக யமஹா வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. மேலும், வியட்நாம் மார்க்கெட்டிற்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் 08எக்ஸ் என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட புதிய 125சிசி ஸ்கூட்டரின் அடிப்படையில்தான் இந்தியாவுக்கான மாடலும் வடிவமைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய 125சிசி ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அப்படி அறிமுகமாகும்போது புதிய ஹோண்டா ஆக்டிவா 125சிசி மற்றும் சுஸுகி ஆக்செஸ் 125சிசி ஸ்கூட்டர் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #yamaha #two wheeler #யமஹா
English summary
According to reports, Japanese two wheeler manufacturer Yamaha is planning to launch new 125cc scooter in Indian market by next year.
Story first published: Saturday, August 2, 2014, 16:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X