மே 20ல் புத்தம் யமஹாவின் புதிய 250சிசி பைக் அறிமுகமாகிறது!

வரும் 20ந் தேதி யமஹா நிறுவனத்தின் ஆர்25 என்ற புத்தம் புதிய 250சிசி பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது யமஹா பிரியர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டுதான் இந்த புதிய பைக்கை யமஹா அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அட, நீங்க இன்னும் பார்க்கவே இல்லையா?

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் இந்த புதிய பைக்கின் தயாரிப்பு நிலை மாடலை வரும் 20ந் தேதி இந்தோனேஷியாவில் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்ய உள்ளது. கடந்த ஆண்டு டோக்கியோ ஆட்டோ ஷோவில் ஆர்25 என்ற கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. இதே மாடல் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சி தந்தது. இந்த நிலையில், தயாரிப்பு நிலை மாடல் இந்தோனேஷியாவில் வைத்து அறிமுகம் செய்கிறது யமஹா.


ரொம்ப தாமதம்

ரொம்ப தாமதம்

250சிசி என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் பல ஜப்பானிய நிறுவனங்கள் சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆனால், யமஹா இந்த செக்மென்ட்டில் மிக தாமதமாகவே அடியெடுத்து வைக்கிறது.

எந்த எஞ்சின்?

எந்த எஞ்சின்?

புதிய ஆர்25 பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்குமா? அல்லது இரட்டை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்குமா என்பது குறித்த தகவல் தெரியவில்லை. பெரும்பாலும் 35 எச்பி பவரை அளிக்கும் இரட்டை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என்பது ஆட்டோமொபைல் துறையினரின் கணிப்பாக இருக்கிறது.

 செக்மென்ட்

செக்மென்ட்

தற்போதுள்ள ஆர்15 மற்றும் ஆர்6 பைக் மாடல்களுக்கு இடையில் இந்த புதிய பைக் மாடல் நிலைநிறுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலை

விலை

ஒருவேளை சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தால், அது ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்குக்கு இணையான விலையில் வரும். இல்லை, ட்வின் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தால் ஹயோசங் ஜிடி250ஆர் மற்றும் சுஸுகி இனசுமா பைக்குகளுக்கு இணையான விலையில் வரும்.

இந்தியாவுக்கு எப்போது?

இந்தியாவுக்கு எப்போது?

சர்வதேச அளவில் முதலில் இந்தோனேஷிய மார்க்கெட்டில் விற்பனைக்கு கெண்டு வரப்பட உள்ளது. இன்னும் ஓர் ஆண்டிற்குள் இந்திய மார்க்கெட்டில் யமஹா ஆர்25 பைக்கின் சீற்றத்தை சாலைகளில் காணும் வாய்ப்பு இருக்கிறது.


Most Read Articles
English summary
Yamaha fans are in for a surprise, the Japanese two wheeler giant will be launching their quarter-litre sports bike the R25 on 20th of May, 2014. Yamaha has teased the bike for a while now and it was expected that the bike would not be ready till 2015.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X