யமஹா ரே இசட் ஸ்கூட்டருக்கு டிசைன் மார்க் விருது!

By Saravana

யமஹா ரே இசட் ஸ்கூட்டர் இந்தியாவின் மதிப்புமிகு டிசைன் மார்க் விருதை பெற்றுள்ளது. பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் புகழ்பெற்ற யமஹா நிறுவனம் இந்தியாவில் முதலாவதாக ரே ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.

இதன் சற்று கவர்ச்சியான டிசைன் கொண்ட மாடலாக ரே இசட் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், ரே இசட் ஸ்கூட்டர் மதிப்புமிக்க இந்திய டிசைன் கவுன்சில் அமைப்பின் டிசைன் மார்க் விருதை பெற்றுள்ளது.

Yamaha Ray Z

இதுகுறித்து கருத்து தெரிவித்த யமஹா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மசாகி அசனோ கூறுகையில்," இந்திய மார்க்கெட்டின் தேவைகளை அறிந்து தயாரிப்புகளை களமிறக்கி வருகிறோம். ரே இசட் ஸ்கூட்டருக்கு கிடைத்துள்ள விருது எங்களது தயாரிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் மட்டுமின்றி, புதிய தயாரிப்புகளை கொண்டு வருவதற்கும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது," என்று கூறினார்.

யமஹா ரே இசட் ஸ்கூட்டரில் 7.1 பிஎஸ் பவரை அளிக்கும் 113சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ரூ.47,735 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
English summary
Yamaha is known to produce bikes that look fast and edgy. The tuning fork company is also known for its performance-focused bikes. When they talked about their intentions of venturing into the Indian scooter segment, people were skeptical about their offerings. However, they did not disappoint and gave us two sharp-looking automatic scooters in the Ray and Ray-Z.
Story first published: Wednesday, May 14, 2014, 13:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X