30,000 ரூபாயில் புதிய பைக்... அட ஆமாம்பா, ஆமாம்: உறுதிப்படுத்திய யமஹா!

இந்திய மார்க்கெட்டிற்காக உலகின் மிக குறைவான விலை கொண்ட புதிய பைக் மாடலை வடிவமைத்து வருவதாக யமஹா தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்த நிலையில், இதனை யமஹா உயர் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

யமஹாவின் புதிய எஃப்இசட் பைக் மாடல்களின் அறிமுக விழாவில் இந்த தகவலை யமஹா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அசனோ மசாகி உறுதிப்படுத்தினார்.

500 டாலர் விலை

இந்த புதிய மோட்டார்சைக்கிள் 500 டாலர் விலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். ரூ.25,000 முதல் ரூ.30,000 வரையிலான விலையில் இந்த புதிய பைக் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

எஞ்சின்

இந்த புதிய பைக் மாடலில் 100சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய 100சிசி பைக் முதலில் இந்தியாவில்தான் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

காலக்கெடு

இந்த புதிய பைக்கை மார்க்கெட்டுக்கு கொண்டு வருவதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்பட வில்லை என்றும் அசனோ மசாகி கூறினார்.

இந்திய டிசைன்

உத்தரபிரதேச மாநிலம், சூரஜ்பூரில் உள்ள யமஹா மோட்டார் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் இந்த புதிய பைக்கை வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

ஏற்றுமதி

இந்த புதிய பைக் ஏற்றுமதி செய்யப்படுமா என்ற கேள்விக்கு, அதுகுறித்து இப்போது சொல்ல இயலாது என்று அசனோ மசாகி கூறினார். ஆனால், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய யமஹா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
மேலும்... #yamaha #two wheeler #யமஹா
English summary
During the launch of the upgraded Yamaha FZ yesterday, Yamaha dropped a bombshell. The company is working on a project to create a low-cost motorcycle for the Indian market that will sell at around USD 500 (approx. INR 30,000).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X