ஸ்கூட்டர் மார்க்கெட்டில் கோட்டை விட்ட பஜாஜ்... மீண்டும் இறங்க முடிவு?

By Saravana

ஆழ்ந்த யோசனைக்கு பின்னர், ஸ்கூட்டர் தயாரிப்பை மீண்டும் துவங்குவதற்கு பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

பஜாஜ் ஆட்டோவின் இருசக்கர வாகன விற்பனை மாதத்திற்கு மாதம் சரிவை நோக்கி செல்கிறது. இதற்கு அணை போடுவதற்கு புதிய செக்மென்ட்டுகளில் இறங்குவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு அந்த நிறுவனம் தள்ளப்பட்டிருக்கிறது. இதையடுத்து, மீண்டும் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் இறங்குவதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

2009ல் உற்பத்தி நிறுத்தம்

2009ல் உற்பத்தி நிறுத்தம்

அதிக மைலேஜ் தரும் பைக்குகளின் வரவால், தவமாய் தவமிருந்து பலர் வாங்கிய பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரின் விற்பனை படு பதாளாத்திற்கு சென்றது. இதையடுத்து, 2007ல் பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர் தயாரிப்பை நிறுத்தியது.

முழுக்கு போட்டது

முழுக்கு போட்டது

2010ம் ஆண்டுடன் தனது பல்சர் மற்றும் டிஸ்கவர் பிராண்டுகளை நம்பி ஸ்கூட்டர் மார்க்கெட்டுக்கு முழுக்கு போட்டது. ஆனால், அது எந்தளவு தவறான முடிவு என்பது இப்போது பஜாஜ் ஆட்டோ உணர்ந்துவிட்டது.

ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்

ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்

சந்தை நிலவரத்திற்கும், போட்டிக்கும் தக்கவாறு தொடர்ந்து ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் தயாரிப்புக்கு பஜாஜ் ஆட்டோ முக்கியத்துவம் கொடுத்திருந்தால் நிச்சயம் விற்பனையில் முக்கிய பங்களிப்பு கிடைத்து வந்திருக்கும். ஆனால், பைக்குகளை மட்டும் நம்பி இறங்கியதால் ஹோண்டாவிடம் தனது இரண்டாவது இடத்தை இழந்து தவிக்கிறது.

 ஞானோதயம்

ஞானோதயம்

ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களின் விஸ்வரூப விற்பனை வளர்ச்சி பஜாஜ் ஆட்டோவை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளது. எனவே, மீண்டும் ஸ்கூட்டர் தயாரிப்பில் கால் பதிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டிருப்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராஜீவ் பஜாஜ் தகவல்

ராஜீவ் பஜாஜ் தகவல்

"பைக் மார்க்கெட்டில் அதிகபட்ச பங்களிப்பை பெற்றிருப்பதாக கருதுகிறோம். எனவே, எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான முயற்சிகளையும், புதிய செக்மென்ட்டுகளில் இறங்குவதற்கும் திட்டமிட்டிருக்கிறோம்," என்று வர்த்தக இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

மீண்டும் சேட்டக்

மீண்டும் சேட்டக்

பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர் பெயருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தனி மதிப்பு இருக்கிறது. எனவே, கியர் மாற்றும் தொல்லையயில்லாத புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலை, அதே பிராண்டு பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே வெளியிடப்பட்ட தொடர்புடைய செய்திகள்

ஏற்கனவே வெளியிடப்பட்ட தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Bajaj auto is planning to relaunch chetak scooter brand in India Soon.
Story first published: Monday, August 10, 2015, 9:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X