இந்தியாவில், இருசக்கர வாகன டயர்களை அறிமுகப்படுத்தும் பிரிட்ஜ்ஸ்டோன்!

By Super

இரு சக்கர வாகனங்களுக்கான டயர் சந்தையில் நுழைய, பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தற்போது, இந்நிறுவனம் சர்வதேச சந்தையில் இரு சக்கர வாகனங்களுக்கும், நான்கு சக்கர வாகனங்களுக்கும் டயர்களை விற்பனை செய்து வருகிறது.

Bridgestone Tyre

இந்தியாவில், இரு சக்கர வாகனங்களுக்கான சந்தை மிக வலுவாக உள்ளது. எனவே, இருசக்கர வாகன டயர் விற்பனை துறையிலும் தடம் பதிக்க பிரிட்ஜ்ஸ்டோன்

இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

எனினும், இது குறித்து இதுவரை எந்த வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை என பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆரம்ப கட்டத்தில், சூப்பர் பைக்குகளுக்கான உயர் வகை டயர்களை விற்பனை செய்வதுதான் சிறந்ததாக இருக்கும் என ப்ரிட்ஜ்ஸ்டோன் நிறுவனம் கருதுகிறது. அதன்

பின்னர், பிற ரகத்திலான இரு சக்கர வாகனங்களுக்கான டயர்களை விற்பனை செய்வது சிறந்த யோசனையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில், பயணியர் வாகனங்களுக்கான எக்கோபியா டயர்களை சமீபத்தில் தான் பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய வகையிலான டயர்கள்

எரிபொருள் சிக்கனத்தை அதிகமாக்கும் தன்மை கொண்டது.

இந்திய சந்தைகளில், எக்கோபியா டயர்களானது ஈபி 150 மற்றும் ஈபி 850 என்ற இரு வகைகளில் கிடைக்கின்றது. ஈபி 150 வகையிலான டயரானது, ஹேட்ச்பேக் மற்றும்

காம்பேக்ட் செடான்களுக்கு உபயோகப்படுத்தலாம். ஈபி 850 வகையிலான டயர்களை எஸ்யூவி ரக வாகனங்களுக்கு பயன்படுத்தலாம்.

ஈபி 150 டயர்கள் எரிபொருள் திறனை ஏழு சதவிகிதம் வரை அதிகரிக்கும். ஈபி 850 டயர்கள் பத்து சதவிகிதம் வரை எரிபொருள் திறனை கூட்டுகின்றது. இதனால்,

வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வாடிக்கையாளர்களின் பல தரபட்ட தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில், ஈபி 150 டயர்கள் 17 வகையிலான அளவுகளிலும், ஈபி 850 டயர்கள் 9 வகையிலான டயர்

சைஸ்களில் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Bridgestone India is planning to enter the highly profitable and huge two-wheeler segment in the country. Internationally they provide tyres for both four-wheelers and two-wheelers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X