விற்பனையில் சக்கைபோடு போடும் பெனெல்லி பைக்குகள்... பெங்களூர் ஷோரூம் சாதனை!

By Saravana

இந்தியாவில் பெனெல்லி பைக்குகள் விற்பனை படுஜோராக இருக்கிறது. குறிப்பாக, பெங்களூரில் உள்ள பெனெல்லி ஷோரூம் விற்பனையில் புதிய சாதனையை படைத்திருக்கிறது. அதாவது, மூன்றே மாதங்களில் 100 பிரிமியம் பைக்குகளை விற்பனை செய்து, நாட்டிலேயே அதிக பைக்குகளை விற்பனை செய்த பெனெல்லி ஷோரூம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

இந்தநிலையில், நூறாவது பைக் டெலிவிரி கொடுப்பதற்காக சிறப்பு நிகழ்ச்சிகளை பெங்களூர் பெனெல்லி ஷோரூம் நிர்வாகம் செய்திருந்தது. இதில், அந்த நிறுவனத்தின் உயரதிகாரிகள் கலந்துகொண்டதோடு, சிறப்பு பைக் அணிவகுப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அணிவகுப்பில் டிரைவ்ஸ்பார்க் தளமும் பங்கேற்றது.

 பைக் அணிவகுப்பு

பைக் அணிவகுப்பு

நூறாவது பைக் டெலிவிரி கொடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பைக் அணிவகுப்பிற்காக, ஏராளமான பெனெல்லி பைக் உரிமையாளர்கள் குழுமினர்.

பார்த்தாலே பரவசம்

பார்த்தாலே பரவசம்

பெனெல்லி டிஎன்டி 899, டிஎன்டி 1130, டிஎன்டி 600ஜிடி, டிஎன்டி 600ஐ மற்றும் டிஎன்டி 300 ஆகிய பைக்குகள் ஒரே இடத்தில் குழுமியது காண கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

நூறாவது பைக்

நூறாவது பைக்

பெங்களூர் ஷோரூமிலிருந்து விற்பனையான நூறாவது பைக்கின் சாவியை வாடிக்கையாளரிடம் டிஎஸ்கே மோட்டார்ஸ்வீல்ஸ் தலைவர் சிரிஷ் குல்கர்னி நேரில் வழங்கினார்.

பைக் அணிவகுப்பு

பைக் அணிவகுப்பு

டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்தின் தலைவர் சிரிஷ் குல்கர்னி பெனெல்லி பைக்குகளின் அணிவகுப்பை கொடியசைத்து துவங்கி வைத்தார்.

 அணிவகுப்பில் டிரைவ்ஸ்பார்க்

அணிவகுப்பில் டிரைவ்ஸ்பார்க்

இந்த பைக் அணிவகுப்பில் IXIL எக்சாஸ்ட் பொருத்தப்பட்டிருந்த டிஎன்டி 600ஐ பைக்கை எமது எடிட்டர் ஜோபோ குருவில்லா ஓட்டினார். அந்த பைக் 84 எச்பி பவரையும், 54.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

சரியான விலை

சரியான விலை

புனேயில் அமைக்கப்பட்டிருக்கும் டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்தின் ஆலையில்தான் பெனெல்லி பைக்குகள் அசெம்பிள் செய்யப்படுகின்றன. இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுவதும், சரியான விலையில் இந்தியர்களுக்கு கிடைக்க ஏதுவாகியிருக்கிறது. இதுவும் இந்த பைக்குகளின் விற்பனை சக்கை போடு போடுவதற்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிட்டு கூறத்தக்கது.

Most Read Articles
English summary
DSK Benelli has been in Indian market for only three months and now celebrate their 100th motorcycle sold in Bengaluru alone. This is a momentous occasion for any superbike manufacturer.
Story first published: Tuesday, July 7, 2015, 10:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X