இந்திய பைக் வீக் திருவிழாவில் 8 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தும் பெனெல்லி

By Saravana

வரும் 20, 21 தேதிகளில் கோவாவில் நடைபெற இருக்கும் இந்திய பைக் வீக் மோட்டார்சைக்கிள் திருவிழாவில் 8 புதிய உயர்வகை பைக் மாடல்களை பெனெல்லி நிறுவனம் காட்சிக்கு வைக்க உள்ளது.

இத்தாலியை சேர்ந்த பெனெல்லி நிறுவனம், இந்தியாவின் டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்தின் கூட்டணியுடன் புதிய பிரிமியம் பைக் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த புதிய நிறுவனம் தனது தயாரிப்புகளை இந்திய பைக் ஆர்வலர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை பிரபலப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

Benelli Bikes

இந்தநிலையில், கோவாவில் நடைபெற இருக்கும் இந்திய பைக் வீக் திருவிழாவில் தனது 8 புதிய பிரிமியம் பைக் மாடல்களை இந்தியர்களின் பார்வைக்கு காட்சிக்கு வைக்க உள்ளது. இதில், 5 பைக் மாடல்கள் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான அறிவிப்பை பெனெல்லி வெளியிட உள்ளது.

மீதமுள்ள 3 சூப்பர் பைக் மாடல்கள் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்டி 300, டிஎன்டி 600ஐ, டிஎன்டி 600ஜிடி, டிஎன்டி 899 மற்றும் டிஎன்டி 1130 ஆகிய பைக் மாடல்கள் விரைவில் வர இருக்கின்றன. இவை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட உள்ளதால் போட்டியாளர்களுக்கு சவாலான விலையில் வரும் என தெரிகிறது.

Most Read Articles
English summary
DSK Motowheels has entered into a partnership with Italian superbike manufacturer, Benelli. This announcement was made last year and the duo are supposed to launch their products by March, 2015. They will first unveil eight of their models at the upcoming India Bike Week festival.
Story first published: Saturday, February 14, 2015, 16:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X