இந்தியாவில் செகண்ட் இன்னிங்சை துவங்கியது டுகாட்டி!

By Saravana

இந்திய சந்தையில் நேரடி வர்த்தகத்தை துவக்கியிருக்கிறது டுகாட்டி பைக் நிறுவனம்.

கடந்த ஆண்டு வரை பிரிசிசன் நிறுவனத்தை அங்கீகரிக்கப்பட்ட இந்திய வினியோகஸ்தராக நியமித்திருந்தது டுகாட்டி. ஆனால், நேரடியாக பைக் விற்பனையை செய்யும் விதத்தில், பிரிசிசன் நிறுவனத்துக்கான அங்கீகாரத்தை ரத்து செய்தது.

Ducati Bike

இந்த நிலையில், தற்போது டெல்லி, மும்பை மற்றும் குர்கான் நகரங்களில் மூன்று ஷோரூம்களுடன் தனது இரண்டாவது இன்னிங்சை இந்தியாவில் துவங்கியிருக்கிறது டுகாட்டி பைக் நிறுவனம்.

தென் இந்திய மார்க்கெட்டில் முதலாவதாக பெங்களூரில் புதிய பைக் ஷோரூமை திறக்கவும் டுகாட்டி திட்டமிட்டிருக்கிறது. டயாவெல், ஹைபர்மோட்டார்டு, பனிகல், மான்ஸ்ட்டர் ஆகிய பைக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. இத்துடன் ஸ்க்ராம்ப்ளர் பைக்கையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ரூ.6.38 லட்சம் விலையிலும், டுகாட்டி மான்ஸ்ட்டர் வரிசை மாடல்கள் ரூ.6.99 லட்சம் முதல் ரூ.25.74 லட்சம் வரையிலும், ஹைபர்மோட்டார்டு ரூ.10 லட்சம் முதல் ரூ.19.11 லட்சம் வரையிலும், டுகாட்டி ஹைபர்ஸ்ட்ராடா ரூ.14.03 லட்சம் முதல் ரூ.20.61 லட்சம் வரையிலும் இருக்கும்.

டயாவெல் மாடல்கள் ரூ.13.83 லட்சம் முதல் ரூ.37.20 லட்சம் வரையிலும், பனிகெல் வரிசை மாடல்கள் ரூ.13.02 லட்சம் முதல் ரூ.46.26 லட்சம் வரையிலும் இருக்கும்.

Most Read Articles
English summary
Italian super bike maker Ducati has announced re-entry into the Indian market with plans to operate sales and service network under a subsidiary.
Story first published: Saturday, March 21, 2015, 15:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X