இருபாலருக்குமான புதிய ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டரை களமிறக்கும் ஹீரோ!

By Saravana

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு நேர் போட்டியாக புதிய ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்.

ஸ்கூட்டர் மார்க்கெட்டில் நம்பர்- 1 மாடலாக இருந்து வரும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரால் ஹீரோ நிறுவனத்துக்கு அவ்வப்போது தலைவலி ஏற்படுகிறது. விற்பனையில் முன்னிலையில் இருக்கும் ஹீரோ ஸ்பிளென்டர் பைக்கிற்கு நேர் போட்டியாக இந்த ஸ்கூட்டர் இருந்து வருகிறது.

எனவே, ஹோண்டா ஆக்டிவா மீதான வாடிக்கையாளர் கவனத்தை திசை திருப்பும் வகையில், புதிய ஸ்கூட்டர் மாடலை ஹீரோ அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்த புதிய ஸ்கூட்டர் ஆண், பெண் என இருபாலருக்குமான மாடலாக இருக்கும் என ஹீரோ வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. மேலும், ஆக்டிவாவை அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியாது என்பதை அறிந்துள்ள ஹீரோ தனது புதிய ஸ்கூட்டர் மாடலில் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களை கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க திட்டமிட்டுள்ளது.

அதாவது, ஸ்கூட்டர் செக்மென்ட்டிலேயே முதல்முறையாக பல நவீன வசதிகளை இந்த புதிய ஸ்கூட்டரில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஹீரோ தெரிவித்திருக்கிறது. இந்த புதிய ஸ்கூட்டர் மாடலில் 110சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு வரும் என்பது இப்போதைய தகவல்.

Most Read Articles
English summary
Hero MotoCorp will introduce an all-new unisex scooter that will rival India's favourite scooter, the Activa. The Indian manufacturer aims to launch several scooters in India by end-2015. The scooter segment in India is one of the fastest growing segments in the two-wheeler category.
Story first published: Tuesday, February 10, 2015, 11:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X