விற்பனையில் ஒரு லட்சத்தை தாண்டிய புதிய ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்!

By Saravana

விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 8 மாதங்களில் விற்பனையில் ஒரு லட்சம் என்ற புதிய மைல்கல்லை தாண்டி சாதனை புரிந்திருக்கிறது புதிய ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்.

புதிய வடிவமைப்பு மற்றும் புதிய எஞ்சினுடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த புதிய பைக் மாடல் நல்ல வரவேற்பை பெற்றிருப்பது இதன் மூலம் உறுதியாகியிருக்கிறது. இந்த பைக்கின் சிறப்பம்சங்களை நினைவூட்டலாக ஸ்லைடரில் காணலாம்.

வடிவமைப்பு சிறப்புகள்

வடிவமைப்பு சிறப்புகள்

சிபி டிரிக்கர் பைக்கிலிருந்து டிசைன் தாத்பரியங்கள் எடுத்து இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஹெட்லைட், பெட்ரோல் டேங்க், பின்புறத்தில் எல்இடி டெயில் லைட், ஃபென்டர் ஆகியவை புதிதாக இருக்கின்றன.

மீட்டர் கன்சோல்

மீட்டர் கன்சோல்

யூனிகார்ன் ரசிகர்களுக்கு பெரும் குறையாக பட்ட அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் முழுமையாக மாற்றப்பட்டு, டிஜிட்டல் டிஸ்ப்ளே இடம்பிடித்திருக்கிறது.

160சிசி எஞ்சின்

160சிசி எஞ்சின்

புதிய கார்ப்புரேட்டர் பொருத்தப்பட்ட 163 சிசி எஞ்சின் கொண்ட புதிய யூனிகார்ன் 14.5 பிஎஸ் பவரையும், 14.61 என்எம் டார்க்கையும் வழங்கும். இது ஹோண்டாவின் எச்இடி தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக மணிக்கு 106 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

 மைலேஜ்

மைலேஜ்

ஹோண்டாவின் புதிய எச்இடி தொழில்நுட்பம் கொண்ட இந்த புதிய பைக் மாடல் லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டிருக்கின்றன.

பிரேக் சிஸ்டம்

பிரேக் சிஸ்டம்

முன்புறத்தில் 240மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் இடம்பெற்றுள்ளன. ஹோண்டாவின் கோம்பி பிரேக்கிங் சிஸ்டமும் ஆப்ஷனலாக கிடைக்கிறது. டியூப்லெஸ் டயர்கள் கொண்டது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

புதிய யூனிகார்ன் 160 கருப்பு, வெள்ளை, சிவப்பு, சாம்பல் என 4 வண்ணங்களில் கிடைக்கும்.

விலை

விலை

ஸ்டான்டர்டு மாடல் ரூ.69,350 விலையிலும், காம்பி பிரேக் சிஸ்டம் கொண்ட மாடல் ரூ.74,414 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்திருக்கிறது.

Most Read Articles
English summary
Honda Motorcycle and Scooters India has recently launched its CB Unicorn 160. It was launched roughly eight months ago and has achieved a major sales milestone in the country. Japanese based manufacturer has managed to sell over 1,00,000 units of this motorcycle since launch. The Unicorn brand has been a popular choice among Indians and this new version adds on to the previous model.
Story first published: Tuesday, July 28, 2015, 9:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X