ஹீரோவும், ஹோண்டாவும் சண்டை போடுதாம்... அத ஊரே வேடிக்கை பாக்குதாம்!!

உலகின் அதிக மைலேஜ் தரும் பைக்காக தனது ஐ- ஸ்மார்ட் பைக்கை சமீபத்தில் அறிவித்து விளம்பரம் செய்து வருகிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். சோதனை நிலைகளில் லிட்டருக்கு 102.5 கிமீ மைலேஜ் தருவதாக அந்த நிறுவனம் தெரிவித்து, தம்பட்டம் அடித்தது வருவதைக் கண்டு ஹோண்டா கொந்தளித்து போயுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நகமும், சதையும் போல இருந்த இந்த இரு நிறுவனங்களும் தற்போது தனித்தனியாக மாறிய பின் கீறியும், பாம்பும் போல மாறிவிட்டன.

ஆம், ஹீரோ ஐஸ்மார்ட் பைக் லிட்டருக்கு 102.5 கிமீ மைலேஜ் தரும் என்று ஹீரோ கூறுவது வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தும் செயல்; இந்த மைலேஜ் விபரம் சுத்த பொய்," என்று ஹோண்டா கூறியுள்ளது.

இதற்கு ஹீரோவும் விளக்கமளித்து பதிலடி கொடுத்துள்ளது. இதுதான் இன்று ஆட்டோமொபைல் துறையின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளதோடு, பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பிள்ளையார் சுழி போட்ட பிளாட்டினா...

பிள்ளையார் சுழி போட்ட பிளாட்டினா...

கடந்த ஜனவரி மாதம் புதிய பிளாட்டினா பைக் மாடலை பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்தது. இந்த புதிய பைக் லிட்டருக்கு 96.9 கிமீ மைலேஜ் தரும் என்றும், இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் பைக் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது. இது போட்டியாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

ஹீரோ ஐஸ்மார்ட்

ஹீரோ ஐஸ்மார்ட்

ஸ்டார்ட்/ ஸ்டாப் சிஸ்டத்துடன் வந்த முதல் பைக் மாடல் என்ற பெருமை ஹீரோ ஐஸ்மார்ட் பைக் பெற்றிருந்தது. இந்தநிலையில், இந்த பைக்கில் சில மாறுதல்கலை செய்து அதிக மைலேஜ் தரும் பைக் மாடலாக ஹீரோ அறிமுகம் செய்தது. அதாவது, சோதனை நிலைகளில் லிட்டருக்கு 102.5 கிமீ மைலேஜ் தருவதால், இதுவே உலகின் அதிக மைலேஜ் தரும் பைக் என்று ஹீரோ தம்பட்டமடித்தது.

 கடுப்பான ஹோண்டா

கடுப்பான ஹோண்டா

ஹீரோ கூட்டணியிலிருந்து பிரிந்து தனியாக வர்த்தகத்தை துவங்கியது முதல் ஹீரோவின் நம்பர்- 1 இடத்தை எப்படியாவது தனதாக்கி விட வேண்டும் என்ற முனைப்பில் தீவிரம் காட்டி வரும் ஹோண்டாவுக்கு ஹீரோ ஐஸ்மார்ட்டின் மைலேஜ் விபரம் கடுப்பை கிளப்பியிருக்கிறது. அதாவது, அந்த எஞ்சினை வடிவமைத்ததே நாங்கள்தான், எங்களது இந்த பைக்கின் எஞ்சின் அதிகபட்சமாக எவ்வளவு மைலேஜ் தரும் என்று எங்களுக்கு தெரியாதா என்ன? என்று கூறியுள்ளது.

 ஹோண்டா தலைவர் அதிரடி

ஹோண்டா தலைவர் அதிரடி

ஹோண்டா இந்தியா நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் தலைவர் கெய்ஜி காசா கூறுகையில்," இந்த எஞ்சினை டிசைன் செய்தது நாங்கள்தான். இந்த எஞ்சினை சோதனை நிலைகளில் ஆய்வு செய்தால் கூட லிட்டருக்கு 102.5 கிமீ மைலேஜ் கிடைக்காது என்று என்னால் கூற முடியும். இதுபோன்று, மைலேஜ் விபரங்களை வெளியிடுவது வாடிக்கையாளர்களுக்கு தவறான தகவலை தருவதாக அமைகிறது," என்று கூறியிருக்கிறார்.

ஹீரோ விளக்கம்

ஹீரோ விளக்கம்

ஐ - ஸ்மார்ட் பைக்கில் புதிய லீன் பர்ன் மற்றும் ஐட்லிங் ஸ்டாப்/ ஸ்டாப் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் இந்த மைலேஜ் சாத்தியமாகியுள்ளது. மேலும், மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட ஐகேட் (International Centre For Automotive Technology) அமைப்புதான் மைலேஜ் சான்றிதழை வழங்கியுள்ளது. எனவே, இதுபற்றி ஹோண்டா தெரிவித்திருக்கும் புகார் இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பை குறைகூறுவதாக இருக்கிறது என்று ஹீரோ மோட்டோகார்ப் கூறியுள்ளது.

விடாத ஹோண்டா

விடாத ஹோண்டா

ஐ- ஸ்மார்ட் பைக்கின் மைலேஜ் சான்று குறித்து ஐ- கேட் விளக்கமளிக்க வேண்டும். நடைமுறையில் இந்த மைலேஜ் சாத்தியமா அல்லது சோதனை நிலைகளில் மட்டுமே இந்த மைலேஜ் சாத்தியமா என்பது குறித்து அந்த அமைப்பு விளக்கமளிக்க வேண்டும் என்று ஹோண்டா நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்களுக்கு இடையிலான இந்த வார்த்தை போர்தான் ஆட்டோமொபைல் உலகின் ஹாட் டாப்பிக்காக மாறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பைக் மைலேஜ் பற்றிய செய்திகள்

பைக் மைலேஜ் பற்றிய செய்திகள்

01. ஃபேஸ்புக்கில் எங்களது ட்ரெண்டிங் செய்திகள்...

Most Read Articles
English summary
Honda, the Japanese two-wheeler maker has questioned Hero MotoCorp's claim of the Splendor iSmart motorcycle's fuel efficiency of 102.5 kpl. Honda has claimed that such information is misleading and is far from reality.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X