இந்தியாவில் ஹோண்டாவின் 150சிசி ஸ்கூட்டர் சோதனை - தகவல்கள்!

By Saravana

இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டை புதிய கோணத்தில் கொண்டு சென்ற பெருமை ஹோண்டாவுக்கே சாரும். ஸ்கூட்டர் என்றாலே ஹோண்டா எனும் அளவுக்கு இந்தியர்களின் மனநிலையை மாற்றியுள்ளது ஹோண்டாவின் ஸ்கூட்டர் மாடல்கள்.

இதனை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக புதிய ரக மாடல்களையும் அந்த நிறுவவனம் தொடர்ந்து களமிறக்கி வருகிறது. ஹோண்டா ஆக்டிவா பிராண்டில் 125சிசி மாடலை அறிமுகம் செய்த அந்த நிறுவனம் தற்போது புதிய 150சிசி மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்யும் எண்ணத்துடன் சாலை சோதனைகளையும் துவங்கியிருக்கிறது.


எந்த மாடல் வருகிறது?

எந்த மாடல் வருகிறது?

ஹோண்டா பிசிஎக்ஸ் 150 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது. தற்போது விற்பனையில் இருக்கும் மாடல்களைவிட மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் இந்த புதிய மாடல் பிரத்யேகத்தை விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

எடை

எடை

தற்போது விற்பனையில் இருக்கும் 110சிசி மற்றும் 125 சிசி ஸ்கூட்டர் மாடல்கள் சராசரியாக 110 கிலோ எடை கொண்டதாக இருக்கும். ஆனால், இந்த புதிய மாடல் 130 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய ஸ்கூட்டர் மாடலில் 13.4 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க்கையும் வழங்கும் 153சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். விமேட்டிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது.

பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

வழக்கமாக 5 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்டதாக வரும் ஸ்கூட்டர்களுக்கு நடுவில் இது 8 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க்குடன் வருகிறது.

 இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

அலாய் வீல்கள், பெரிய ஹெட்லைட்டுகள், அனலாக் ஸ்பீடோமீட்டர், சிறிய டிஜிட்டல் டிஸ்ப்ளே, டிஸ்க் பிரேக் சிஸ்டம், டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் போன்றவை சிறப்பம்சங்களாக கூறலாம்.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.70,000 முதல் ரூ.75,000 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary

 Japanese two wheeler manufacuturer Honda is planning to launch PCX 150cc Scooter in India.
Story first published: Tuesday, January 20, 2015, 18:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X