3 புதிய பைக்குகள்... சரவெடி கொளுத்த கவாஸாகி ரெடி!!

By Saravana

இந்திய பிரிமியம் பைக் மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கும் கவாஸாகி நிறுவனம், மூன்று புதிய மாடல்களை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

கவாஸாகி இசட்250எஸ்எல், நின்ஜா இசட்எக்ஸ் 6ஆர் 636 மற்றும் வல்கன் எஸ் ஆகிய மூன்று மாடல்கள்தான் இந்திய வர இருக்கும் மாடல்கள். இதில், கவாஸாகி இசட்250 எஸ்எல் மாடல் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

கவாஸாகி இசட்250 எஸ்எல்

கவாஸாகி இசட்250 எஸ்எல்

இது ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரக பைக் மாடல். கவாஸாகி இசட்250 பைக்கின் சாயலிலேயே இருக்கிறது. ஆனால், இது சிங்கிள் சிலிண்டர் எஞ்சினுடன் வருவதால், போட்டியாளர்களுக்கு கடும் சவால் தரும் விலையில் வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

கவாஸாகி இசட்250 எஸ்எல் பைக்கில் 249சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு எஞ்சின் இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 27.62 எச்பி பவரையும், 22.6 என்எம் டார்க்கையும் வழங்க வல்லது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் வருகிறது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.2 லட்சத்திற்கும் குறைவான விலை கொண்ட மாடலாக வருவதால், இந்த புதிய பைக் மாடல் விற்பனையில் பெரிய பங்களிப்பை கவாஸாகி நிறுவனத்துக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வல்கன் எஸ்

வல்கன் எஸ்

மற்றொரு மாடல் வல்கன் எஸ் க்ரூஸர் ரக மாடல். இந்த பைக்கை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய கவாஸாகி திட்டமிட்டிருப்பதால், இதன் விலையும் கவர்ச்சிகரமாக இருக்கும் என நம்பலாம்.

எஞ்சின்

எஞ்சின்

வல்கன் எஸ் மாடலில் 61 எச்பி பவரையும், 62 என்எம் டார்க்கையும் வழங்கும் லிக்யூடு கூல்டு 649சிசி பேரலல் ட்வின் எஞ்சின் உள்ளது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.

கவஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 6ஆர் 636

கவஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 6ஆர் 636

இந்த பைக் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிளில் 636சிசி 4 சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த பைக்கின் எஞ்சின் 129.2 பிஎச்பி பவரையும், 70 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த பைக்கில் ஸ்லிப்பர் க்ளட்ச், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் போன்றவை இருக்கும். ரூ.12 லட்சம் ஆரம்ப விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும்.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki is all set to take India by storm after launching its flagship motorcycle Ninja H2 here. They now will be bringing their most humble offering to India in the form of Z250SL.
Story first published: Saturday, April 25, 2015, 15:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X