புதிய கவாஸாகி ஹைப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்!
எதிர்பார்த்ததைவிட குறைவான விலையில் புதிய கவாஸாகி நின்ஜா எச்2 ஹைப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
சென்னை, பெங்களூர், டெல்லி, கொல்கத்தா மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள கவாஸாகியின் பிரத்யேக டீலர்ஷிப்புகள் வழியாக இந்த பைக் விற்பனை செய்யப்படும். இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கும் இந்த புதிய ஹைப்பர் பைக் பற்றிய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

தடைகளை தாண்டி...
இந்த பிரத்யேகமான ஹைப்பர் பைக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் இருந்த பல சிக்கல்களை தாண்டி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதாக கவாஸாகி அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்புற அமைப்பு
கவாஸாகி நின்ஜா எச்2 பைக்கின் வல்லமையை உணர்த்தும் விதத்திலேயே முகப்பு மிரட்டலாக இருக்கிறது. புரொஜெக்டர் ஹெட்லைட், பைலட் விளக்குகள் மற்றும் ஏர் இன்டேக் சிஸ்டத்துடன் ஹெட்லைட் ஹவுசிங் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

பக்கவாட்டு டிசைன்
முன்புறத்தில் ஏரோடைனமிக்ஸை வழங்கும் ஃபேரிங் பேனல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து, நேக்டு ஸ்டைல் போன்ற தோற்றத்தை கொண்டிருக்கிறது. முழுவதுமாக மறைக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் பைக் போன்று இல்லாமல் வித்தியாசமான தோற்றத்தை கொண்டிருக்கிறது.

பின்புற டிசைன்
இரட்டை மஃப்ளர் கொண்ட சைலென்சர், ஒற்றை ரியர் ஸ்விங் ஆர்ம் ஆகியவை முக்கிய அம்சங்கள்.

எஞ்சின்
கவாஸாகி நின்ஜா எச்2 ஹைப்பர் பைக்கில் 4 சிலிண்டர் கொண்ட 998சிசி லிக்யூடு கூல்டு சூப்பர்சார்ஜ்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரையும், 133.5 என்எம் டார்க்கையும் வழங்கும். ராம் ஏர்சிஸ்டத்தின் மூலம் இதன் அதிகபட்ச சக்தியை 207 பிஎச்பி வரை உயர்த்த முடியும்.

பாதுகாப்பு வசதிகள்
கவாஸாகி நின்ஜா எச்2 பைக்கில் கிப்ஸ் ஏபிஎஸ், ட்ராக்ஷன் கன்ட்ரோல், ஸ்டீயரிங் டேம்பர் ஆகியவை உள்ளன. மிரர் கோட்டட் பிளாக் என்ற ஒரே வண்ணத்தில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை விபரம்
ரூ.29 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய கவாஸாகி நின்ஜா எச்2 பைக் விற்பனைக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








