கவாஸாகி இசட்250 எஸ்எல் பைக்... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

By Saravana

விலையுயர்ந்த பைக் பிராண்டான கவாஸாகி விரைவில் தனது குறைவான விலை பைக் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஆம், இந்த ஆண்டு இறுதியில், தனது இசட்250எஸ்எல் பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு கவாஸாகி நிறுவனம் முடிவு செய்துள்ளது. விற்பனைக்கு வரும்போது, கவாஸாகியின் குறைவான பைக் மாடலாக இருக்கும். இந்த பைக்கின் சிறப்பம்சங்களை அறிந்து கொள்ள விருப்பமுள்ளவர்களுக்கு ஸ்லைடரில் தகவல்கள் காத்திருக்கிறது.

ரகம்

ரகம்

இந்த பைக் ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரகத்தை சேர்ந்தது. மிடுக்கான தோற்றம் கொண்ட இந்த பைக் இளம் வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், இதன் டிசைன் அப்படி.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கின் மிக முக்கியமான அம்சம் என்பது ஒற்றை சிலிண்டர் எஞ்சின் கொண்டது. இந்த பைக்கில் 249சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் உள்ளது. எனவே, கடும் சவாலான விலையில் நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பவர் விபரம்

பவர் விபரம்

கவாஸாகி இசட்250எஸ்எல் பைக்கின் எஞ்சின் அதிகபட்சமாக 27.62 எச்பி பவரையும், 22.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த பைக் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

இந்தியாவில் உற்பத்தி

இந்தியாவில் உற்பத்தி

விலையை குறைவாக நிர்ணயம் செய்ய ஏதுவாக, இந்த பைக்கை உதிரிபாகங்களாக இறக்குமதி செய்து இந்தியாவில் அசெம்பிள் செய்ய கவாஸாகி திட்டமிட்டிருக்கிறது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.2 லட்சத்திற்கும் குறைவான விலையில் வருவதால், போட்டியாளர்களுக்கு கடும் சவால் தரும் என்று நம்பலாம். மேலும், கவாஸாகியின் வாடிக்கையாளர் வட்டம் வெகுவாக விரிவடைய துணைபுரியும்.

Most Read Articles
English summary
Kawasaki Z250SL is most likely to be introduced by Kawasaki India as their sole single cylinder engine. Their plan is to launch this new product offering in India by 2015-end and attract larger audience.
Story first published: Saturday, August 29, 2015, 10:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X