'சோதனை மேல் சோதனை'!... எமது கேமராவில் சிக்கிய மஹிந்திரா மோஜோ!

By Saravana

பெங்களூரில் சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக் டிரைவ்ஸ்பார்க் கேமரா கண்ணில் மீண்டும் சிக்கியது.

பண்டிகை காலத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த பைக்கின் சோதனைகள் இன்னமும் முடிந்தபாடில்லை. எமது ஸ்பை படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 அறிமுகம்

அறிமுகம்

கடந்த 2012ம் ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், மஹிந்திரா மோஜோ பைக் முதல்முறையாக பார்வைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், சில டிசைன் மாற்றங்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

சோதனை மேல் சோதனை

சோதனை மேல் சோதனை

கோவையிலுள்ள கரி ஸ்பீட் வே, லடாக், பெங்களூர் என பல்வேறு இடங்களில் வைத்து பல ஆண்டுகளாக சோதனை மேல் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சரி, சோதனைகள் முடிந்து, இந்த தீபாவளிக்கு வந்துவிடும் என்று கருதப்பட்ட நிலையில், தற்போது பெங்களூர் சாலைகளில் வைத்து சோதனை செய்து கொண்டிருந்தபோது, மீண்டும் எமது கேமரா கண்ணில் சிக்கியது. இன்னும் சோதனைகள் முடிந்தபாடில்லை என்றே தெரிகிறது.

எஞ்சின்

எஞ்சின்

கவாஸாகி, யமஹா, கேடிஎம் போன்ற ஜாம்பவான் போட்டியாளர்கள் மிரட்டி வரும், ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் இந்த பைக் நுழைய உள்ளது. இந்த பைக்கில் 26 பிஎஸ் பவரையும், 24 என்எம் டார்க்கையும் வழங்கும் 295சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த பைக்கில் பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு மோனோ ஷாக் அப்சார்பர், எல்இடி பைலட் விளக்குகள், பைரெலி ஸ்போர்ட் டெமான் டயர்கள், முன்சக்கரத்தில் பெட்டல் டிஸ்க் பிரேக் போன்றவை இடம்பெற்றிருக்கிறது. டிஜிட்டல்- அனலாக் மீட்டர்களுடன் கூடிய மீட்டர் கன்சோல் அமைப்பு, இரட்டை புகைப்போக்கி குழாய்கள் போன்றவையும் முக்கியமானதாக குறிப்பிடலாம்.

அறிமுகம்

அறிமுகம்

வரும் தீபாவளி பண்டிகையின்போது, அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படும் நிலையில், சாலை சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. ஒருவேளை, தீபாவளிக்கு வராவிடில், அடுத்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹாட்ரிக் தரிசனம் கொடுத்து, விற்பனைக்கு வந்துவிடும் என நம்பலாம்.

Most Read Articles
English summary
The Mahindra Mojo has been in the news for a long time now, with people speculating the launch date. The motorcycle, however, has literally travelled the length and breadth of the country, on test. It has been spotted multiple times and there are enough photographs to give a person the overall design of the Mojo.
Story first published: Wednesday, September 2, 2015, 9:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X