மூன்று மாடல்களில் வருகிறது புதிய பஜாஜ் அவென்ஜர்!

By Saravana

புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட பஜாஜ் அவென்ஜர் பைக் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அடுத்த சில தினங்களில் புதிய பஜாஜ் அவென்ஜர் பைக் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்ஜெட் விலையிலான க்ரூஸர் பைக் மாடல் என்பதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதிய அவென்ஜர் பைக்கை மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனை செய்ய பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளதாம். குறைவான விலை க்ரூஸர் ரக பைக் என்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

டிசைன்

டிசைன்

பொதுவான தோற்றத்தில் பெரிய மாறுதல்கள் இருக்காது. அதேநேரத்தில், கால மாற்றத்துக்கும், வாடிக்கையாளர்களின் ரசனைக்கும் ஏற்ப, சில புது டிசைன் அம்சங்களை பெற்றிருக்கும்.

புதிய எஞ்சின்

புதிய எஞ்சின்

தற்போது விற்பனையில் இருக்கும் மாடலில் 19 பிஎச்பி பவரையும், 17.5 என்எம் டார்க்கையும் வழங்கும் 220சிசி எஞ்சினுடன் கிடைக்கிறது. இதற்கு பதிலாக பல்சர் 200என்எஸ் பைக் மாடலில் பயன்படுத்தப்படும் 200சிசி எஞ்சினை புதிய அவென்ஜரில் பொருத்தியுள்ளனர். இந்த எஞ்சின் அதிகபட்சம் 23 பிஎச்பி பவரையும், 18.3 என்எம் டார்க்கையும் அளிக்க வல்லதாக இருக்கிறது. இது லிக்யூடு கூல்டு சிஸ்டம் கொண்டது.

கூடுசல் வசதிகள்

கூடுசல் வசதிகள்

நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ப சேடில் பேக்குகள் மற்றும் இதர ஆக்சஸெரீகளை கூடுதலாக வழங்கப்படும். இதன்மூலமாக, பட்ஜெட் விலையில் ஓர் சிறப்பான க்ரூஸர் மாடல் அந்தஸ்தை புதிய அவென்ஜர் பெற இருக்கிறது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய அவென்ஜர் பைக்கின் பேஸ் வேரியண்ட்டை ஒரு லட்ச ரூபாயில் அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. கூடுதல் வசதிகள் கொண்ட மாடல்கள் இதைவிட விலை அதிகமாக இருக்கும். எனவே, ஒரு லட்ச ரூபாய் என்ற பட்ஜெட்டை தாண்ட இருக்கிறது புதிய அவென்ஜர்.

விற்பனை இலக்கு

விற்பனை இலக்கு

மாதத்திற்கு 4,000 பைக்குகள் என்ற சராசரி விற்பனையை பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில், புதிய அவென்ஜர் மாடலுக்கு மாதம் 20,000 என்ற சராசரி விற்பனை இலக்கை நிர்ணயிக்க பஜாஜ் ஆட்டோ முடிவு செய்துள்ளது.

Most Read Articles
English summary
Bajaj Auto is most likely to launch their all-new Avenger in three new variant options for the Indian market.
Story first published: Thursday, October 1, 2015, 11:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X