மல்டிஸ்ட்ரேடா 1200 பைக்கிற்கு போட்டியாளர்களால் கசகசப்பு... ஜெனிவா மோட்டார் ஷோவையும் விடாத டுகாட்டி!

ஜெனிவா மோட்டார் ஷோவில் விதவிதமான கார்களின் தரிசனத்தை கண்டுகளித்துக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு, டுகாட்டி நிறுவனத்தின் மல்டிஸ்ட்ரேடா 1200 பைக்கின் திடீர் தரிசனம் சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

அதுவும், டுகாட்டி நிறுவனத்தின் சிஇஓ., கிளாடியோ இந்த பைக்கை அரங்கில் வைத்து ஒரு ரவுண்ட் ஓட்டி வந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினார். அட்வென்ச்சர் டூரர் ரகத்தில் தனிக்காட்டு ராஜாவாக இருந்து வந்த டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1200 பைக்கிற்கு தற்போது பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் மற்றும் கேடிஎம் 1050 அட்வென்ச்சர் ஆகிய பைக்குகளால் போட்டி ஏற்பட்டிருக்கிறது.

இந்த நெருக்கடியை தவிர்ப்பதற்காக, புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பைக்கை பிரபலப்படுத்துவதற்காக ஜெனிவா மோட்டார் ஷோவையும் டுகாட்டி விட்டுவைக்க வில்லை. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் நிகழ்ச்சியில் இந்த பைக்கை அறிமுகம் செய்து பார்வையாளர்களை ஈர்த்தார் கிளாடியோ. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


சிறப்பான மாடல்

சிறப்பான மாடல்

2003ல் அறிமுகம் செய்யப்பட்ட டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1100 பைக்கிற்கு மாற்றாக, அறிமுகம் செய்யப்பட்டது மல்டிஸ்ட்ரேடா 1200. கடந்த 2010ல் விற்பனைக்கு வந்த இந்த பைக் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து, தற்போது பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களுடன் புதிய பைக் மாடல் வந்திருக்கிறது. இந்த புதிய பைக் மாடல் கடந்த ஆண்டு இத்தாலியில் நடந்த EIMCA மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

விற்பனை

விற்பனை

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஆண்டிலேயே 10,000 டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1200 பைக்குகள் விற்பனையானது. அடடா, இந்த செக்மென்ட்டில் உடனடியாக ஒரு புதிய பைக் மாடலை களமிறக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிஎம்டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்ககள் களத்தில் குதித்தன. அதன் விளைவாக தற்போது டுகாட்டி மல்டிஸ்ட்ரேடாவுக்கு போட்டி ஏற்பட்டுள்ளது.

அட்வென்ச்சர் டூரர்

அட்வென்ச்சர் டூரர்

சூப்பர் பைக்கின் எஞ்சினுடன், எந்தவொரு சாலை நிலையையும் தாங்கிக் கொள்ளும் வல்லமை கொண்ட ஃப்ரேம் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்புடன் கட்டமைக்கப்படுவதே அட்வென்ச்சர் டூரர். டுகாட்டி நிறுவனத்தின் வெற்றிகரமான டெஸ்ட்ராஸ்ட்ரேட்டா 1100 சூப்பர் பைக்கின் எஞ்சினில் மாற்றங்களை செய்து இந்த பைக்கில் பயன்படுத்தியுள்ளனர். முழுமையான எஞ்சின் விபரத்தை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

டெஸ்ட்ராஸ்ட்ரேட்டா பைக்கின் 1198சிசி வி ட்வின் எஞ்சினில் மாற்றங்களை செய்து பொருத்தியுள்ளனர். இந்த எஞ்சின் ஆஃப்ரோடு மற்றும் சாதாரண சாலைகள் என இரண்டிலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும்.2013ம் ஆண்டில் இந்த பைக்கின் எஞ்சினில் ட்வின் ப்ளக் சிலிண்டர் ஹெட் கொடுக்கப்பட்டது. இதனால், அதிர்வுகள் குறைக்கப்பட்டு, செயல்திறனும் கூட்டப்பட்டுள்ளது. மேலும், 10 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் 2015ம் ஆண்டு மாடலில் இருக்கும் எஞ்சின் அதிகபட்சமாக இந்த 160 எச்பி பவரையும், 136 என்எம் டார்க்கையும் வழங்க வல்லது.

முதல்முறையாக...

முதல்முறையாக...

முதல்முறையாக மோட்டார்சைக்கிளில் டெஸ்மோட்ரோமிக் வேரியபிள் டைமிங் என்ற புதிய தொழில்நுட்பம் இந்த பைக்கின் எஞ்சினில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம், அனைத்து சூழ்நிலைகளிலும் எஞ்சின் சீரான, சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 233 கிமீ வேகம் வரை எட்டக்கூடிய அம்சங்களை இந்த பைக் கொண்டிருக்கிறது. கடந்த 2010, 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் பைக் பீக்ஸ் போட்டிகளில் முதலிடத்தை பிடித்து அசத்தியது.

ஆக்டிவ் சஸ்பென்ஷன்

ஆக்டிவ் சஸ்பென்ஷன்

சாலை நிலைகளுக்கு தக்கவாறு, தானியங்கி முறையில் சஸ்பென்ஷன் அமைப்பு மாறிக்கொள்ளும் ஆக்டிவ் சஸ்பென்ஷன் சிஸ்டம் உள்ளது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், எலக்ட்ரானிக் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் என்று பல்வேறு பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த பைக் விற்பனை செய்யப்படுகிறது. போட்டியாளர்கள் ஒருபக்கம் இருந்தாலும் இந்த பைக்கின் விற்பனையை அசைப்பது கடினம் என்பது டுகாட்டியின் நம்பிக்கை.

Most Read Articles
English summary
The Ducati CEO Claudio Domenicali riding one Ducati multistrada 1200 bike at the Geneva Motor Show this year is definitely a very strong statement to the competitors. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X