சைக்கிள் கம் மொபட்... அண்ணனுக்கு ஒரு மோட்டோபெட் பார்சல்!

By Saravana

சைக்கிள் ஓட்டிச்செல்லும்போது திடீரென அலுப்பு ஏற்படலாம். அப்போது, சைக்கிளை நிறுத்தி சிறிது ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் பயணிக்கிறோம். ஆனால், அதுவும் ஒரு குறைந்த தூர பயணத்திற்கான தீர்வே.

ஆனால், கொஞ்சம் அதிக தூரம் பயணிப்பதற்கான எளிய போக்குவரத்து சாதனமாக சைக்கிளை மாற்றினால் எப்படியிருக்கும் என்பதை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டதுதான் மோட்டோபெட். சைக்கிள் போன்றும் மிதித்து ஓட்டிச் செல்லலாம். சோர்வடையும்போது எஞ்சினை இயக்கி பயணம் தடையில்லாமல் ஓட்டிச் செல்ல முடியும். அந்த அட்டகாசமான புதிய போக்குவரத்து சாதனம் ஆவலை ஏற்படுத்திவிட்டதா... வாருங்கள் ஸ்லைடரில் படங்களுடன், தகவல்களை காணலாம்.


பன்வகை பயன்பாடு

பன்வகை பயன்பாடு

சைக்கிள், நகர்ப்புறத்தில் பயணிப்பதற்கான மொபட் என்று மட்டுமல்லால், டர்ட் பைக் போன்றும் இதனை சாகசங்களுக்கும் பயன்படுத்த முடியும். சிறந்த க்ரிப் கொண்ட அகலமான டயர்கள், உறுதியான ஃப்ரேம் ஆகியவை இதனை உறுதி செய்கின்றன. உறுதியான அலுமினியம் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எனவே, நீடித்த உழைப்பையும் வழங்கும்.

மர மட்கார்டுகள்

மர மட்கார்டுகள்

மரத் தகடுகளிலான மட்கார்டுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும், இது ஒரு க்ரூஸர் வகை மொபட் என்பதால், நீண்ட தூரம் பயணிக்கும்போது அலுப்பை தராத வகையில், சிறப்பான ரைடிங் பொசிஷன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த மொபட் சைக்கிளில் 49சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிர்வுகள் குறைவான சீரான இயக்கத்தை தருவதால் நிம்மதியான பயண அனுபவத்தை வழங்கும்.

மைலேஜ்

மைலேஜ்

5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. ஒருமுறை பெட்ரோல் டேங்க்கை முழுவதுமாக நிரப்பினால் 300 கிமீ தூரத்துக்கும் அதிகமாக பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுனர் உரிமம்

ஓட்டுனர் உரிமம்

இந்த மொபட்டை இயக்குவதற்கு ஓட்டுனர் உரிமம் தேவையில்லை. பொருட்களை வைத்துக்கொள்வதற்கு பின்புறம் கேரியர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

விலை

விலை

மோட்டோபெட் 2,399 டாலர் விலையில் ஆர்டரின்பேரில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
MOTOPED is what it isn't, and dares to be different. Lightweight, clever, low carbon footprint, fuel efficient, purposeful, and fun--MOTOPEDS® go places and do things that traditional bicycles or motorcycles can't. MOTOPED gets you there with head-turning style that's impossible to ignore. 
Story first published: Saturday, February 28, 2015, 12:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X