1,500சிசி எஞ்சினுடன் இன்னும் பவர்ஃபுல் மாடலாக வரும் சுஸுகி ஹயபுசா!

By Ravichandran

புதிய 1,500சிசி எஞ்சினுடன் சுஸுகி ஹயபுசா பைக் மேம்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

மேலும், புதிய ஹயபுசா பைக் எப்படியிருக்கும் என்பது குறித்த மாதிரி படம் ஒன்றையும் ஜப்பானிலிருந்து வெளிவரும் யங் மேகஸின் என்ற பத்திரிக்கை வெளியிட்டிருக்கிறது. புதிய எஞ்சின் மற்றும் யங் மெஷின் வெளியிட்ட மாதிரி படம் ஆகியவை புதிய சுஸுகி ஹயபுசா மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 கான்செப்ட் மாடல்

கான்செப்ட் மாடல்

கடந்த மாதம் சுஸுகி நிறுவனம் வெளியிட்டிருந்த கான்செப்ட் ஜிஎஸ்எக்ஸ் அடிப்படையிலான டிசைன் தாத்பரியங்களுடன் புதிய சுஸுகி ஹயபுசா வடிவமைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிசைன் அம்சங்கள்

டிசைன் அம்சங்கள்

முகப்பு கவுல் பகுதி, ஏர் இண்டேக் மற்றும் ஹெட்லைட்கள் கான்செப்ட் ஜிஎஸ்எக்ஸ் போன்றே, ஒரே மாதிரியாக இருக்கிறது. முன்பு இருந்த யூனிப்ரோ-ஸ்டைல் டே டைம் எல்ஈடி விளக்குகள் அழகாக இருந்தன. இந்த புதிய வடிவ மாற்றத்தை பற்றி இப்போது கருத்து கூறுவதற்கில்லை.

1500சிசி ஹயாபுஸா?

1500சிசி ஹயாபுஸா?

தற்போது சுஸுகி ஹயபுசாவில் 1,340சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. ஆனால், புதிய சுஸுகி ஹயபுசா பைக் 1,500சிசி எஞ்சினுடன் கூடுதல் சக்தியை வெளிப்படுத்தும் விதத்தில் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுசுகி-யின் சமிஞ்சை?

சுசுகி-யின் சமிஞ்சை?

யங் மெஷின் இதழில் வெளியான படத்தில் 1500 என்ற எண் தான், மிகவும் குழப்பும் அம்சமாக உள்ளது. சுசுகி 1500 சிசி பைக்கை தயாரிப்பதற்கான சமிஞ்சையாகவும் அந்த படம் விளங்குகிறது.

நெருக்கடி

நெருக்கடி

கவாஸாகியின் இசட்எக்ஸ் 14ஆர் பைக் சுசுகியின் ஹயாபுஸாவிற்கு பெரும் நெருக்கடியை தந்துள்ளது. எனவே, அதிக சக்திவாய்ந்த மாடலாக புதிய ஹயபுசா பைக்கை மேம்படுத்தி அறிமுகம் செய்ய இருக்கிறது சுஸுகி.

 சுசுகியின் தேவைகள்;

சுசுகியின் தேவைகள்;

1500சிசி பைக்-களை உருவாக்க விரும்பினால், அதற்காக பிரத்யேகமாக புதிய பெரிய பவர் பிளான்ட், சேசி திருத்தங்கள் உட்பட தங்களின் தற்போதைய 1,340 சிசி பைக்கில் ஏராளமான மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும்.

 தெளிவுதன்மை;

தெளிவுதன்மை;

இந்த அனைத்து திசைதிருப்பும் விஷயங்களுக்கும் ஒரே தீர்வு, இந்த 29 அக்டோபர் துவங்கி நவம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும் டோக்கியோ மோட்டர் ஷோ வரை காத்திருப்பது தான். அப்போது தான், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Suzuki Hayabusa plans to Tap into the 1,500cc Bike Territory. There are unconfirmed indications that Suzuki Hayabusa might be upgraded to 1500 cc Bike category.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X