2 புதிய சுஸுகி சூப்பர் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

By Saravana

இரண்டு புதிய சுஸுகி சூப்பர் பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பெரும்பான்மையான சிறப்பம்சங்களில் ஒரே மாடல்தான் என்றாலும், பாடி ஸ்டைலில் மட்டும் வேறுபடுகின்றன.

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்1000 என்ற மாடல் நேக்டு பாடி டிசைன் கொண்டிருக்கிறது. அதன் ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட மாடலாக, சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்1000எஃப் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு புதிய சுஸுகி சூப்பர் பைக் குறித்த முழுமையானத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவம்

வடிவம்

இரண்டு பைக்குகளும் 2,110மிமீ நீளம், 795மிமீ அகலம் மற்றும் 1,180மிமீ உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு பைக்குளும் 1,460மிமீ வீல் பேஸையும், 140மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உடையது.

எஞ்சின்

எஞ்சின்

இரண்டு பைக் மாடல்களிலும், ஒரே எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்குகளில் இருக்கும் 999சிசி 4 சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 144 எச்பி பவரையும், 105.75 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கான்ஸ்டன்ட் மெஷ் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும்.

பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

இரண்டு பைக்குகளிலும் இருக்கும் பெட்ரோல் டேங்க் 17 லிட்டர் கொள்ளளவு கொண்டது.

எடை

எடை

நேக்டு பாடி டிசைனிலான சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் 1000 பைக் மாடல் 209 கிலோ எடையும், சிறப்பான ஏரோடைனமிக்ஸை வழங்குவதற்காக ஃபேரிங் பேனல்கள் கொண்ட சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் எஸ்1000எஃப் பைக் மாடல் 214 கிலோ எடையும் கொண்டது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

மூன்று நிலைகளில் மாற்றக்கூடிய டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ட்யூப்லெஸ் டயர்கள் உள்ளிட்டவை இந்த புதிய மாடல்களின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள்.

விலை விபரம்

விலை விபரம்

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் எஸ்1000 மாடல் ரூ.12.25 லட்சம் விலையிலும், சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் எஸ்1000எஃப் மாடல் ரூ.12.70 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

Most Read Articles
English summary
Japanese motorcycle manufacturer Suzuki has launched the Suzuki GSX-S1000 and the GSX-S1000F in India today. The GSX-S1000 is a naked street bike while the GSX-S1000F is a fully faired version.
Story first published: Tuesday, May 19, 2015, 16:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X