இனி ஸ்னாப்டீல் தளம் மூலமும் சுஸுகி இருசக்கர வாகனங்களை வாங்கலாம்

By Ravichandran

சுசுகி நிறுவனத்தின் இரு சக்கர தயாரிப்புகளை இப்போது ஸ்னாப்டீல் மூலமும் வாங்க முடியும்.

இணைய வழி வர்த்தகம், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் துறையாகும். இதை, பல்வேறு வகையான வர்த்தக நிறுவனங்கள் திறன்மிக்க வகையில் பயன்படுத்தி கொள்கின்றனர்.

ஸ்னாப்டீல் மூலம் சுசுகி மோட்டார்சைக்கிள்கள்;

ஸ்னாப்டீல் மூலம் சுசுகி மோட்டார்சைக்கிள்கள்;

சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா, தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளை விற்க, இணைய வழி வர்த்தக நிறுவனமான ஸ்னாப்டீலுடன் கை கோர்த்துள்ளது.

இனி, வாடிக்கையாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, ஸ்னாப்டீல் மோட்டார்ஸ் தளத்தின் மூலம், சுசுகி இருசக்கர வாகன தயாரிப்புகளை ஆன்லைனில் பார்த்து, தங்களுக்கு பிடித்த மாடலை தேர்வு செய்ய முடியும்.

இதோடு மட்டுமல்லாமல், சுசுகி நிறுவன தயாரிப்புகளை புக்கிங்-கும் (புக்கிங் தொகை செலுத்தி) செய்ய முடியும்.

சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் கருத்து;

சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் கருத்து;

இணைய வழி வர்த்தகம் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருவதை அடுத்து, ஸ்னாப்டீல் போன்ற இணைய வழி வர்த்தக நிறுவனத்துடன், மேற்கொள்ளபட்ட இந்த கூட்டணி நல்ல தேர்வாக அமைந்துள்ளது என சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் எம்டி, மஸயோஷி இட்டோ கூறினார்.

மேலும், இந்த புதிய கூட்டணி ஸ்னாப்டீலுக்கும், சுசுகி நிறுவனத்திற்கும் மற்றும் வாட்டிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் லாபகரமானதாக இருக்கும் என மஸயோஷி இட்டோ தெரிவித்தார்.

ஸ்னாப்டீல் நிறுவனத்தின் கருத்து;

ஸ்னாப்டீல் நிறுவனத்தின் கருத்து;

ஸ்னாப்டீல் மோட்டார்ஸ் பிளாட்ஃபார்ம் உடன் சுசுகி நிறுவனம் இணைந்தது குறித்து, ஸ்னாப்டீல் நிறுவனத்தின் உயர் அதிகாரி டோனி நவீன் மிகுந்த மகிழ்ச்சி வெளிபடுத்தினார்.

மேலும், தங்கள் நிறுவனத்தின் ஸ்னாப்டீல் மோட்டார்ஸ் பிளாட்ஃபார்ம், சிக்கல்கள் இல்லாத ஆட்டோ லோன் அப்ளிகேஷன் பிராஸஸிங் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கபட்டுள்ளது என டோனி நவீன் தெரிவித்தார்.

ஆன்லைனில் கிடைக்கும் மாடல்கள்;

ஆன்லைனில் கிடைக்கும் மாடல்கள்;

ஸ்னாப்டீல் மோட்டார்ஸ் பிளாட்ஃபார்ம் மூலம், சுசுகி நிறுவனத்தின் ஜிக்ஸர் எஸ்எஃப், தி ஜிக்ஸர், ஹயாதே மோட்டார்சைக்கிள், ஆக்ஸஸ் 125, ஸ்விஷ் 125 மற்றும் ஸ்கூட்டர்கள் உள்ளிட்டவை, புக்கிங் செய்யும் வகையில் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

புக்கிங் முறை;

புக்கிங் முறை;

வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த மோட்டார்சைக்கிளை புக்கிங் செய்ய, ஸ்னாப்டீல் மோட்டார்ஸ் பிளாட்ஃபார்ம் மூலம் முதலில் தங்களுக்கு பிடித்த வாகனத்தை தேர்வு செய்ய வேண்டும்.

அதன் பின், திரும்ப பெற முடியாத வகையிலான ரூபாய் 3000 தொகையை டெபாஸிட் செய்ய வேண்டும். இப்படியாக, வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் வாகனங்களின் புக்கிங் ஆகிவிடும்.

டெலிவரி;

டெலிவரி;

வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த வாகனங்களை தேர்வு செய்து, டெபாஸிட் தொகையையும் செலுத்திய பின், தங்களுக்கு பிடித்த மற்றும் அருகாமையில் உள்ள டீலர்ஷிப்களை தேர்வு செய்து டெலிவரிக்கான மற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

சிறப்பு சலுகை;

சிறப்பு சலுகை;

ஸ்னாப்டீல் மோட்டார்ஸ் பிளாட்ஃபார்ம் மூலம் மோட்டார்சைக்கிள்களை வாங்குபவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கபடுகிறது.

ஆரம்பகால அறிமுக சலுகையாக, வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கான வாகன இன்ஷுரன்ஸ் இலவசமாக வழங்கபடுகிறது என்பது குறிப்பிடதக்கது.

Most Read Articles
English summary
Suzuki Motorcycles can be purchased online through Snapdeal Motors platform. Suzuki Motorcycles has teamed up with leading e-tailer Snapdeal, to sell its two wheelers. Sales of Suzuki Motorcycles through Snapdeal Motors platform is expected to be beneficial for Suzuki, Snapdeal and Customers also.
Story first published: Tuesday, November 24, 2015, 10:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X