இந்தியாவின் டாப் 10 இருசக்கர வாகனங்கள்... உங்க வண்டி லிஸ்ட்ல இருக்கானு பாருங்க!!

By Saravana

இந்திய மக்களின் தினசரி போக்குவரத்து தேவையை நிறைவு செய்வதில் இருசக்கர வாகனங்கள் முக்கி பங்களிப்பை வழங்கி வருகின்றன. இதன்காரணமாக, இருசக்கர வாகனங்களின் விற்பனை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருக்கிறது.

கடும் சந்தைப் போட்டி நிலவி வரும் போதும், சில மாடல்கள் டாப் 10 இடத்தை பிடித்து அசத்துகின்றன. கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2014- 15ம் ஆண்டு நிதி ஆண்டில், இந்தியாவில் அதிகம் விற்பனையாகி முதல் 10 இடங்களுக்குள் வந்து சாதித்த அந்த இருசக்கர வாகனங்களின் விபரங்களை ஸ்லடரில் காணலாம்.

 10. ஹீரோ கிளாமர்

10. ஹீரோ கிளாமர்

டாப் 10 இருசக்கர வாகனங்களின் பட்டியலில் கடைசி இடத்தில் ஹீரோ கிளாமர் பைக் உள்ளது. கடந்த நிதி ஆண்டில் 5,51,486 கிளாமர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எரிபொருள் சிக்கனம் மிக்க எஞ்சின், கிளாமரான தோற்றம் ஆகியவை இந்த பைக்கின் விற்பனையை பல மாதங்கள் ஸ்திரப்படுத்தி, 10வது இடத்தை பெறுவதற்கு உறுதிப்படுத்தியுள்ளன.

 09. பஜாஜ் டிஸ்கவர்

09. பஜாஜ் டிஸ்கவர்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டிஸ்கவர் பிராண்டு 9வது இடத்தில் உள்ளது. கடந்த நிதி ஆண்டில் டிஸ்கவர் வரிசையில் 5,52,855 பைக்குகளை பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்துள்ளது. பட்டியலில் 9வது இடத்தை பிடித்தாலும், டிஸ்கவர் பிராண்டு சந்தோஷமாக இல்லை. ஏனெனில், அதற்கு முந்தைய நிதி ஆண்டை ஒப்பிடும்போது, கடந்த நிதி ஆண்டில் டிஸ்கவர் பைக்குகளின் விற்பனை 43.9 விழுக்காடு சரிந்துவிட்டது.

 08. ஹோண்டா ட்ரீம்

08. ஹோண்டா ட்ரீம்

எட்டாவது இடத்தில் ஹோண்டா ட்ரீம் பைக் உள்ளது. கடந்த நிதி ஆண்டில் 6,14,342 ட்ரீம் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. அதற்கு முந்தைய நிதி ஆண்டைவிட ட்ரீம் வரிசை பைக்குகளின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது. டிஸ்கவர் வரிசையின் விற்பனை இறங்குவதற்கு ஹோண்டாவின் இந்த ட்ரீம் வரிசை பைக் மாடல்களும் ஒரு காரணமாக கூறலாம்.

 07. பஜாஜ் பல்சர்

07. பஜாஜ் பல்சர்

பட்டியலின் ஏழாவது இடத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் பிராண்டு இடம்பிடித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் 6,31,354 பல்சர் பைக்குகளை பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்துள்ளது. ஒரே ஆறுதல் கடந்த நிதி ஆண்டில் டாப் 10 பட்டியலில் ஒரு இடம் முன்னேறியுள்ளது.

 06. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

06. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

ஆறாவது இடத்தை யாரும் நினைத்திராத ஒரு இருசக்கர வாகன மாடல் பிடித்திருக்கிறது. அதுதான் டிவிஎஸ் நிறுவனத்தின் எக்ஸ்எல் சூப்பர் மொபட். கடந்த நிதி ஆண்டில் 7,55,503 டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மொபட்டுகள் விற்பனையாகியுள்ளன. போட்டி எதுவும் இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாக மொபட் செக்மென்ட்டில் கோலோய்ச்சி வருகிறது.

5. ஹோண்டா சிபி ஷைன்

5. ஹோண்டா சிபி ஷைன்

பட்டியலில் 5வது இடத்தில் ஹோண்டா சிபி ஷைன் பைக் பிடித்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 8,27,458 ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2013- 14 நிதி ஆண்டு விற்பனையை ஒப்பிடும்போது, பட்டியலில் கடந்த நிதி ஆண்டில் ஒரு படி மேலே ஏறியிருக்கிறது.

 04. ஹீரோ எச்எஃப் டீலக்ஸ்

04. ஹீரோ எச்எஃப் டீலக்ஸ்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் குறைவான விலை பட்ஜெட் மாடல். பட்ஜெட் பைக் என்று கூற முடியாத அளவு சிறப்பான டிசைன், நம்பகமான எஞ்சின் ஆகியவற்றுடன் 4வது இடத்தில் உள்ளது. கடந்த நிதி ஆண்டில் 10,82,193 ஹீரோ டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

03. ஹீரோ பேஷன்

03. ஹீரோ பேஷன்

பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஹீரோ பேஷன் பைக் உள்ளது. கடந்த நிதி ஆண்டிலும், அதற்கு முந்தைய நிதி ஆண்டிலும் 3வது இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் 13,41,424 ஹீரோ பேஷன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், விற்பனை கடந்த நிதி ஆண்டில் 7.4 விழுக்காடு குறைந்தது குறிப்பிடத்தக்கது.

 02. ஹோண்டா ஆக்டிவா

02. ஹோண்டா ஆக்டிவா

விற்பனையில் முன்னிலை வகிக்கும் சில பைக் மாடல்களுக்கே போட்டியையும், நெருக்கடியையும் கொடுத்து வரும் மாடல் ஹோண்டா ஆக்டிவா. செயல்திறன்மிக்க ஸ்மூத்தான எஞ்சின், நம்பகத்தன்மை போன்றவற்றின் மூலம் விற்பனையில் அசுர வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. கடந்த நிதி ஆண்டில் 21,78,227 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டு 16,74,178 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த நிதி ஆண்டில் 30.1 விழுக்காடு விற்பனை வளர்ச்சியை பதிவு செய்து ஹோண்டாவின் எதிர்காலத்தை பிரகாசமாக்கி வருகிறது.

 01. ஹீரோ ஸ்பிளென்டர்

01. ஹீரோ ஸ்பிளென்டர்

பல ஆண்டுகளாக விற்பனையில் நம்பர்- 1 இடத்தை தக்க வைத்து வருகிறது ஹீரோ ஸ்பிளென்டர். அதிக மைலேஜ் தரும் எஞ்சின், குறைவான பராமரிப்பு போன்றவை ,தொடர்ந்து ஹீரோ ஸ்பிளென்டரை நம்பர்- இடத்தில் வைத்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் ,25,17,189 ஹீரோ ஸ்பிளென்டர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2013- 14 நிதி ஆண்டை ஒப்பிடுகையில், கடந்த நிதி ஆண்டில் விற்பனை 11.1 விழுக்காடு அதிகரித்துள்ளது.

Most Read Articles
English summary
Let's take a look at top 10 motorcycles that have been sold during the financial year of 2014-15:
Story first published: Wednesday, April 22, 2015, 16:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X