5 உதவாக்கரைகளுக்கு 'கல்தா' கொடுத்த யமஹா... க்ரக்ஸ் தலை தப்பியது!!

இந்தியாவில், 5 யமஹா பைக் மாடல்களின் விற்பனை அதிரடியாக நிறுத்தப்பட்டிருக்கிறது. அந்த 5 பைக்குகளின் விபரமும், யமஹா இந்தியா நிறுவனத்தின் இணையப் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.

இந்த மாடல்களுக்கு மாற்றாக, புதிய மாடல்களை அந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனையிலிருந்து நிறுத்தப்பட்ட மாடல்களின் விபரத்தையும், கூடுதல் தகவல்களையும், ஸ்லைடரில் காணலாம்.

மாடல்கள் விபரம்

மாடல்கள் விபரம்

யமஹா எஸ்எஸ்- 125, எஸ்இசட் ஆர், ஒய்பிஆர்110, ஒய்பிஆர் 125 மற்றும் எஸ்இசட் எஸ் ஆகிய 5 மாடல்களின் விற்பனைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

மாற்று மாடல்கள்

மாற்று மாடல்கள்

எஸ்இசட் வரிசை மாடல்களின் வெர்ஷன் 2.0 எனப்படும் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் விற்பனைக்கு வந்துவிட்டதால், பழைய மாடல்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, 125சிசி மார்க்கெட்டில் சலூட்டோ பைக்கின் வரவும், இரண்டு பழைய மாடல்களின் விற்பனை நிறுத்த காரணமாகியிருக்கிறது.

உற்பத்திக்கு சவுகரியம்

உற்பத்திக்கு சவுகரியம்

சந்தைப் போட்டியை கருதியும், உற்பத்தி பிரிவில் புதிய மாடல்களுக்கு வழிவிடும் வகையிலும், 5 பழைய மாடல்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாக யமஹா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

க்ரக்ஸ் தப்பியது

க்ரக்ஸ் தப்பியது

இருப்பினும், யமஹாவின் அதிரடியிலிருந்து க்ரக்ஸ் பைக் தப்பியது. யமஹாவின் ஆரம்ப நிலை மாடலாக தொடர்ந்து விற்பனையில் இருக்கும் வாய்ப்பை இந்த பைக் பெற்றிருக்கிறது. கடந்த 2004ல் யமஹாவின் பிரபல ஆர்எக்ஸ்100 மாடலுக்கு மாற்றாக இந்த பைக் விற்பனைக்கு வந்தது நினைவுகூறத்தக்கது.

புதிய மாடல்கள்

புதிய மாடல்கள்

5 மாடல்களின் விற்பனை நிறுத்தப்பட்டாலும், புதிய மாடல்களை அறிமுகம் செய்யும் முனைப்பில் யமஹா உள்ளது. வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், யமஹாவின் புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், மிக முக்கியமான மாடலாக யமஹா ஆர்15 எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Yamaha has discontinued 5 bike models in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X