ஆகஸ்ட் 11ல் அறிமுகமாகிறது யமஹாவின் புதிய 300சிசி ஸ்போர்ட்ஸ் பைக்!

By Saravana

அடுத்த மாதம் 11ந் தேதி டெல்லி அருகே நொய்டாவில் அமைந்திருக்கும் புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் கார் பந்தய களத்தில் யமஹாவின் புதிய ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த புதிய பைக் மாடல் இதன் செக்மென்ட்டில் அதிவேக ஆக்சிலரேசனும், மிக மென்மையான ஓட்டுதல் தரத்தையும் கொண்ட பைக் என யமஹா மார் தட்டுகிறது. 300சிசி செக்மென்ட்டில் நிலைநிறுத்தப்பட இருக்கும் இந்த புதிய யமஹா ஸ்போர்ட்ஸ் பைக் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

யமஹா ஆர்25 பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதால், ஆர்25 மற்றும் ஆர்3 பைக்குகள் பார்ப்பதற்கு ஒன்றுபோல தெரிகின்றன. புதிய யமஹா ஆர்3 பைக்கில் டியூவல் ஹெட்லைட் கொடுக்கப்பட்டிருக்கிறது. 10 ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் டிஜிட்டல் அனலாக் மீட்டர் கன்சோல் உள்ளது.

 வடிவம்

வடிவம்

புதிய யமஹா ஆர்3 பைக் 2,090மிமீ நீளமும், 720மிமீ அகலமும், 1,135மிமீ உயரமும் கொண்டது. இந்த பைக் 1,380மிமீ வீல் பேஸும், 160மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸும் கொண்டது. 169 கிலோ எடை கொண்டது.

 எஞ்சின்

எஞ்சின்

புதிய யமஹா ஆர்3 பைக்கில் 321சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 42 பிஎச்பி சக்தியையும், 29.6 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 செயல்திறன்

செயல்திறன்

அதிகபட்சமாக மணிக்கு 187 கிமீ வேகம் வரை செல்லத்தக்கதாக வருகிறது. மேலும், 0- 60 கிமீ வேகத்தை 2.89 வினாடிகளிலும், 0 -100 கிமீ வேகத்தை 6 வினாடிகளிலும் எட்டும் வல்லமை கொண்டதாக இருக்கும்.

 இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் கொண்டிருக்கும். இதேபோன்று, முன்புறத்தில் 298மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக் அமைப்பும் இருக்கும். சர்வதேச சந்தையில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொண்டதாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவிலும் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கும் என கருதப்படுகிறது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

புதிய யமஹா ஆர்3 பைக் நீலம், சிவப்பு மற்றும் கருப்பு வண்ணங்களில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

 எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

இந்தோனேஷியாவிலிருந்து முக்கிய பாகங்கள் தருவிக்கப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, கவாஸாகி நின்ஜா 300 பைக்கைவிட விலை அதிகம் இருக்கும் என்று கருதப்படுகிறது.

Most Read Articles
English summary
Yamaha has announced an event on August 11th, to put an end to all speculations about their quarter-litre offering new R3.
Story first published: Tuesday, July 28, 2015, 15:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X