வந்துவிட்டது புதிய யமஹா சல்யூடோ 125சிசி பைக் - தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!!

பட்ஜெட் ரகத்தில் புதிய 125சிசி பைக் மாடலை யமஹா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. யமஹா சல்யூடோ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய 125சிசி பைக் சென்னையிலுள்ள புதிய யமஹா ஆலையில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

யமஹாவின் எஃப்இசட் மற்றும் எஸ்எஸ் மோட்டார்சைக்கிள்களின் டிசைன் தாத்பரியங்களை பயன்படுத்தி, குறைவான விலையில் ஒரு புதிய மாடலாக இதனை உருவாக்கியுள்ளனர். மேலும், இந்த பைக்கில் புதிதாக உருவாக்கப்பட்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கை பற்றி உங்களுக்கு பயன்படும் தகவல்களை ஸ்லைடரில் வழங்கியிருக்கிறோம்.

இலகு எடை மாடல்

இலகு எடை மாடல்

125சிசி பைக் செக்மென்ட்டில் மிக குறைவான எடை கொண்ட மாடல் யமஹா சல்யூடோ. இந்த பைக் வெறும் 112 கிலோ எடை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடிவம்

வடிவம்

யமஹா சல்யூடோ பைக் 2,035மிமீ நீளம், 1,080மிமீ உயரம், 700மிமீ அகலம் உடையது. இது 125மிமீ வீல்பேஸ் மற்றும் 180மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் புதிதாக உருவாக்கப்பட்ட 125சிசி ஏர்கூல்டு எஞ்சின பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 8.5 பிஎச்பி பவரையும், 10.1 என்எம் டார்க்கையும் வழங்கும். இது ப்ளுகோர் எனப்படும் புதிய தொழில்நுட்பம் கொண்டதுடன், அடக்கமான காம்பூஷன் சேம்பரை கொண்டுள்ளது.

 மைலேஜ்

மைலேஜ்

யமஹா சல்யூடோ பைக் லிட்டருக்கு 78 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த பைக்கில் 7.6 லிட்டர் கொள்ளளவு உடைய பெட்ரோல் டேங்க் உள்ளது.

 பிரேக் சிஸ்டம்

பிரேக் சிஸ்டம்

முன்புறத்திலும், பின்புறத்திலும் 130மிமீ விட்டம் கொண்ட டிரம் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.

விலை

விலை

ரூ.52,000 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய யமஹா சல்யூடோ பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Yamaha is known for developing and producing performance oriented motorcycles. The Japanese two-wheeler manufacturer has launched its new Saluto motorcycle. This motorcycle is expected to attract the commuter segment to the brand and sell high volumes.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X