புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

இத்தாலியில் உள்ள மிலன் நகரில் துவங்கியிருக்கும் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

By Saravana Rajan

இந்திய இளைஞர்களின் மத்தியில் பெரும் ஈர்ப்பையும், வரவேற்பையும் பெற்ற மாடல் கேடிஎம் ட்யூக். அட்டகாசமான இதன் ஸ்டைல் நம் நாட்டு இளைஞர்களை வசீகரித்து விட்டது.

இந்தநிலைியல், இத்தாலியில் உள்ள மிலன் நகரில் துவங்கியிருக்கும் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக் குறித்த தகவல்கள், படங்களை இந்த செய்தியில் காணலாம்.

 புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

தற்போதைய மாடலைவிட மிகவும் கூர்மையான முகப்பு அமைப்பும், உடல் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் பைக்கின் டிசைன் தாத்பரியங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, பிளவுபட்ட எல்இடி ஹெட்லைட் அமைப்பு வசீகரமாக உள்ளது.

 புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

பெட்ரோல் டேங்க் இன்னும் முறுக்கேற்றப்பட்டு முன்னோக்கி சாய்ந்து காணப்படுகிறது. ஸ்டெப் இருக்கைகள் உள்ளன. பெட்ரோல் டேங்கில் ட்யூக் பிராண்டு பெயர் கம்பீரமாக தெரிகிறது.

 புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

ட்ரெல்லிஸ் ப்ரேம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் அம்சம். பின்புறத்தில் இரட்டை பிளவுடன் கூடிய வால்பகுதி, தலைகீழ் முக்கோண வடிவிலான டெயில் லைட்டுகள், ஆரஞ்ச் வண்ணப் பூச்சு கொண்ட சக்கரங்கள் போன்றவை பைக்கின் வசீகரிகத்துக்கு வலு சேர்க்கின்றன.

 புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

முன்புறத்தில் 43மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளது. அதேபோன்று, முன்புறத்திலும், பின்புறத்திலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், ஸ்லிப்பர் க்ளட்ச் உள்ளிட்ட நிரந்தர பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்று இருக்கிறது.

 புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

தற்போதைய மாடலில் இருக்கும் 373சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின்தான் புதிய மாடலிலும் இடம்பெற்று இருக்கிறது. அதிகபட்சமாக 43.3 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பவர் டெலிவிரி சீராக இருக்கும் விதத்தில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

 புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

மேலும், எஞ்சினுக்கு கீழ் வெளியில் தெரியாமல் இருந்த சைலென்சர் தற்போது பக்கவாட்டில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஐரோப்பிய மாசு உமிழ்வு விதிகளுக்கு உகந்ததாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

 புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

தற்போதைய மாடலில் 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் இருந்த நிலையில், புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் 13.4 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது.

 புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

புதிய டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வண்டியின் வேகம், எந்த கியரில் பயணிக்கிறது, ஓடிய தூரம், ட்ரிப் மீட்டர் மற்றும் எரிபொருள் அளவை காட்டும் வசதிகள் உள்ளன.

 புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

சாவியை போட்டு வண்டியை ஸ்டார்ட் செய்வதற்கான இக்னிஷன் அமைப்பு பெட்ரோல் டேங்க் மூடிக்கு முன்னால் இடம் மாறியிருக்கிறது. மொத்தத்தில் வடிவமைப்பிலும், பாதுகாப்பிலும் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

 புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹாராஷ்டிர மாநிலம், சகனில் உள்ள பஜாஜ் ஆட்டோ ஆலையில் இந்த புதிய பைக் மாடல் அசெம்பிள் செய்யப்படும்.

Most Read Articles
English summary
KTm has unveiled the all new Duke 390 which features a radical new styling package and ride by wire.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X