புதிய பஜாஜ் பல்சர் 135சிசி,150சிசி, 180சிசி பைக் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய பஜாஜ் பல்சர் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற பஜாஜ் பல்சர் வரிசை மாடல்கள் மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பல்சர் 135,150 மற்றும் 180சிசி ஆகிய மாடல்கள் தற்போது புதிய அம்சங்களுடன், மேம்படுத்தப்பட்ட எஞ்சினுடன் விற்பனைக்கு வந்துள்ளன. கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

புதிய பஜாஜ் பல்சர் 135எல்எஸ்

பஜாஜ் பல்சர் 135 பைக்கின் வண்ணங்களும், ஸ்டிக்கர் அலங்காரமும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன. முன்னர் இருந்த பிளவு இருக்கை அமைப்புக்கு பதிலாக, ஒற்றை இருக்கை அமைப்புடன் வந்துள்ளது. சைலென்சர் குழாய் கருப்பு வண்ணத்தில் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. பிளவு பட்ட கிராப் ரெயில் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய பல்சர் 135 பைக்கின் எஞ்சின் பிஎஸ்-4 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்டதாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 13.56 பிஎஸ் பவரையும், 11.4 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டு இருக்கிறது. கியர் லிவரும் மாற்றம் கண்டிருக்கிறது.

புதிய பஜாஜ் பல்சர் 135 எல்எஸ் பைக் ரூ.60,178 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பழைய மாடலைவிட ரூ.2,000 வரை கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய பஜாஜ் பல்சர் 150

இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற பல்சர் மாடல் இதுதான். புதிய வண்ணத்திலும், கவர்ச்சிகரமான ஸ்டிக்கர் வடிவமைப்புடன் புதுப்பொலிவு பெற்றிருக்கிறது. டிசைனில் பெரிய மாற்றங்கள் இல்லை.

இந்த பைக்கில் இருக்கும் 149சிசி டிடிஎஸ்ஐ எஞ்சின் பிஎஸ்-4 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்டதாக மேம்பட்டிருக்கிறது. இந்த பைக் லிட்டருக்கு 65 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக் சிஸ்டமும் உள்ளது. ட்யூப்லெஸ் டயர்களுடன் வந்துள்ளது. ரூ.73,513 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. பழைய மாடலைவிட இது ரூ.800 வரை கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பஜாஜ் பல்சர் 180

புதிய பஜாஜ் பல்சர் 180 பைக்கும் புதிய வண்ணத்திலும், புதிய ஸ்டிக்கர் அலங்காரத்துடன் வந்துள்ளது. இந்த பைக்கின் பின்சக்கரத்திலும் இப்போது டிஸ்க் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பல்சர் 220எஃப் பைக்கை போன்றே இந்த பைக்கின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரின் பேக்லிட் நீல வண்ணத்திற்கு மாறியிருக்கிறது. இந்த பைக் 145 கிலோ எடை கொண்டது.

இந்த பைக்கில் இருக்கும் 178.6சிசி டிடிஎஸ்ஐ ஏர்கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 17.02 பிஎஸ் பவரையும், 14.22 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ரூ.79,575 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். பழைய மாடலைவி ரூ.3,400 வரை விலை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
2017 Bajaj Pulsar 135LS,150 and 180 launched in India.
Please Wait while comments are loading...

Latest Photos