2017 கேடிஎம் டியூக் 390 பைக்கின் ஸ்பை படங்கள் வெளியாகியது

By Ravichandran

2017 கேடிஎம் டியூக் 390 பைக்கின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் 2 உற்பத்தி செய்யும் நிறுவனம் தான், இந்த கேடிஎம் டியூக் 390 பைக்கை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது.

கேடிஎம் டியூக் 390 பைக், மிகவும் ஸ்டைலான டூ வீலர்களில் ஒன்றாக உள்ளது. இதன் சோதனைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 2017 கேடிஎம் டியூக் 390 பைக் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

அடுத்த தலைமுறை 2017 கேடிஎம் டியூக் 390 பைக்கின் சோதனைகள் பலத்த உருமறைப்புடன் இந்தியாவின் சாலைகளில் மேற்கொள்ளப்பட்டது. 2017 கேடிஎம் டியூக் 390 பைக்கின் உலகளாவிய அறிமுகம், இந்த ஆண்டில் வரும் மாதங்களில், இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறும் 2016 இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் நடைப்பெற உள்ளது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் பொருத்தவரை, 2017 கேடிஎம் டியூக் 390 பைக், இரண்டு பிரிவுகளாக கொண்ட எல்இடி ஹெட்லேம்ப்கள் கொண்டுள்ளது. மேலும், இது ஹெட்லேம்ப்கள் வரை நீண்டு கொண்டிருக்கும் புதிய ஃப்யூவல் டேங்க் கொண்டுள்ளது.

பின்பக்க டிசைன்;

பின்பக்க டிசைன்;

2017 கேடிஎம் டியூக் 390 பைக்கின் பின்பக்கத்தில், புதிய ரியர் சப்ஃபிரேம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட எக்ஸ்ஹாஸ்ட் சிஸ்டம் கொண்டுள்ளது. இவை, இந்த பக்கவாட்டில் நீண்டு காணப்படுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

2017 கேடிஎம் டியூக் 390 பைக், 373 சிசி, சிங்கிள்-சிலிண்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், தற்போதைய இஞ்ஜின் வெளிப்பாடான 44 பிஹெச்பியை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யூரோ4 தரம்;

யூரோ4 தரம்;

2017 கேடிஎம் டியூக் 390 பைக்கின் இஞ்ஜின், மிக கடுமையான யூரோ4 மாசு உமிழ்வு நெறிமுறைகளுக்கு இணக்கமானதாக இருக்கும்.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

தற்போது விற்பனையில் உள்ள கேடிஎம் டியூக் 390 பைக்கை போல், இந்த 2017 கேடிஎம் டியூக் 390 பைக்கிலும் டியூவல் சேனல் ஏபிஎஸ், தலைகீழாக பொருத்தப்பட்டுள்ள ரியர் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் உள்ளிட்ட அம்சங்கள் தொடரப்படும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஃபேஸ்புக் மூலமாக பைக்கை விற்க முயன்ற கேடிஎம் உரிமையாளர் கொடூர கொலை!

விரைவில் புதிய தலைமுறை கேடிஎம் டியூக் 200 மற்றும் 390 பைக் மாடல்கள்

2017 கேடிஎம் டியூக் 390 பைக்கின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
2017 KTM Duke 390 was spotted testing in India for first time disguised with some rather heavy camouflage. These Spy Pics were released. Next-gen KTM Duke 390 is expected to make its global debut at 2016 EICMA show in Milan. Its engine abides to stricter Euro 4 emission norms. 2017 KTM Duke 390 will feature dual channel ABS, upside down front forks. To know more, check here...
Story first published: Thursday, September 8, 2016, 21:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X