அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் டெலிவரி துவங்கியது

Written By:

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் டெலிவரி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் துவங்கிவிட்டது. அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரானது இந்தியாவில் ஏப்ரல் 22-ஆம் தேதி விற்பனைக்கு வந்தது. பண்டிகை காலத்தை ஒட்டி, இந்தியாவில் பல்வேறு தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் டெலிவரி, தற்போது இந்தியாவில் துவங்கிவிட்டது. அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் மற்றும் அதன் டெலிவரி குறித்த செய்திகளை இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

அப்ரிலியா எஸ்ஆர் 150...

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், இத்தாலியை சேர்ந்த அப்ரிலியா நிறுவனம் இந்தியாவில் தயாரித்து வழங்கும் முதல் ஸ்கூட்டர் ஆகும். இதன் டிசைன், செயல்திறன், மைலேஜ் மற்றும் விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களினால் இந்திய வாடிக்கையாளர்கள் இடையே வேகமாக பிரபலமாகி வருகிறது.

டெலிவரி;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் டெலிவரி, பரவலாக 6 நகரங்களில் துவங்கியது. தற்போதைய நிலையில், அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் டெலிவரி, சென்னை, பெங்களூரு, கேரளா, நாக்பூர், ஹைத்ராபாத் மற்றும் பூனே ஆகிய பகுதிகளில் துவங்கிவிட்டது. பிற பகுதிகளிலும், இதன் டெலிவரி விரைவில் துவங்கிவிடும் என செய்திகள் வெளியாகிறது.

புக்கிங்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் புக்கிங் இந்தியா முழுவதும் உள்ள பியாஜியோ டீலர்ஷிப்களில் ஏற்கப்பட்டு வருகிறது. இதை தவிர, விருப்பபடும் வாடிக்கையாளர்கள் இதன் புக்கிங்கை www.paytm.com என்ற அந்நிறுவனத்தின் இணையதளத்திலும் செய்து கொள்ளலாம்.

கிடைக்கும் நிறங்கள்;

தற்போதைய நிலையில், அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், வைட் மற்றும் மேட் பிளாக் ஆகிய 2 வண்ணங்களில் மட்டும் கிடைத்து வருகிறது.

விலை;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், 65,000 ரூபாய் என்ற ஈர்க்கும் வகையிலான (எக்ஸ்-ஷோரூம் பூனே) விலையில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

உற்பத்தி;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாராமதி என்ற இடத்தில் உள்ள உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்படுகிறது. மேலும், செலவுகளை குறைக்கும் நோக்கில், வெஸ்பா ஸ்கூட்டர்களும் இங்கே உற்பத்தி செய்யப்படுகிறது.

இஞ்ஜின்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், சிங்கிள் சிலிண்டர் உடைய 154.40 சிசி, ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 11.20 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 11.50 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

டயர்கள்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கு, 120/70 செக்ஷன் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டயர்கள், 14 இஞ்ச் அளவிலான 5 ஸ்போக்குகள் கொண்ட அல்லாய் வீல்களில் பொருத்தப்பட்டிருக்கும்.

மேலும்... #அப்ரிலியா #aprilia
English summary
Deliveries of Aprilia SR150 Scooter commences in Six Indian regions namely, Bengaluru, Chennai, Hyderabad, Kerala, Nagpur, and Pune. Other Indian cities will receive the Aprilia SR150 very soon. Aprilia launched its first made in India product - Aprilia SR150 Scooter in August 2016. This scooter is locally manufactured at Piaggio's facility in Baramati, Maharashtra. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos